உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

௱௭௰

தொல்காப்பியம் - இளம்பூரணம்


என்றது. தலைவிக்கு இயற்கைப் புணர்ச்சி முதலாகச் களவின்கட் ‘குறிப்பினுமிடத்தினுமல்லது’ [களவியல்-௰௮] நிகழ்ச்சி யில்லாவற்றினும் கூற்று நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று.

மறைந்தவற் காண்டல் என்பது—தன்னைத் தலைவன் காணாமல் தான் அவனைக் சாணுங் காட்சி.

தற்காட்டுறுதல் என்பது—தன்ன அவன் காணுமாறு நிற்றல்.

நிறைந்த... மழுங்கல் என்பது—நிரம்பிய வேட்கையால் தலைவன் கூறிய சொற்கேட்டு எதிர்மொழி கூறாது மடித்து நிற்றல்.

இம் மூன்றிடத்தினுங் கூற்று நிகழாது.

வழிபாடு மறுத்தல் என்பது—அதன்பின் இவள் வேட்கைக்குறிப்புக் கண்டு சாரலுற்றவழி அதற்கு உடம்படாது மறுத்தல்.

அது குறிப்பினானும் கூற்றினானும் வரும்.

மறுத்தெதிர் கோடல் என்பது—மறுத்தாங்கு மறாது பின்னும் ஏற்றுக் கோடல்.

பழிதீர்...தோற்றல்—குற்றந்தீர்ந்த முறுவல் சிறிது தோற்றுவித்தல்.

அது புணர்தற்கு உடம்பாடு காட்டி நிற்கும். இவை யாறுநிலையும் புணர்ச்சிக்குமுன் நிகழும். ஈண்டுக் குறிப்புநிகழ்ச்சியல்லது கூற்றுக்கழ்ச்சி அருகியல்லது வாராது. அவற்றுள் சில வருமாறு;—

“இகல்வேந்தன் சேனை” என்னும் முல்லைக்கலியன்,

“மாமருண் டன்ன மழைக்கட்சிற் றாய்ச்சியர்
நீமருட்டுஞ் சொற்கண் மருள்வார்க் குரையவை
யாமுனியா வேறுபோல் வைகற் பதின்மரைக்
காமுற்றுச் செல்வாயோர் கட்குத்திக் கள்வனை
நீயெவன் செய்தி பிறர்க்கு ;

உரை, யாமெவன் செய்து நினக்கு ;

இது வழிபாடு மறுத்தது. இன்னும் இதனுள்,

“தேங்கொள் பொருப்பன் சிறுகுடி யெம்மாயர்
வேந்தூட்டரவத்து நின்பெண்டிர் காணாமைக
காஞ்சித்தா துக்கன்ன தாதெரு மன்றத்துத்
தூங்குங் குரவையு ணின்பெண்டிர் சேளாமை
யாம்பற் குழலாற் பயிர்பயிர்த் தெம்படப்பைக்

காஞ்சிக்கீழ்ச் செய்தேங் குறி.” [கலித் - ௱௮.]

இது மறுத்தெதிர் கோடல்.

பழிதீர் முறுவல் சிறிதே தோற்றற்கு உதாரணம்;—

“அன்னையோ,
மன்றத்துக் கண்டாங்கு சான்றோர் மகளிரை
யின்றி யமையேனென் றின்னவுஞ் சொல்லுவாய்
நின்றாய்நீ சென்றீ யெமர்காண்பர் நாளையுங்

கன்றொடு சேறும் புலத்து.” [கலித் - ௱௰]

இதனுள் “அன்னையோ” என்பது நகையொடு கூடிய சொல்.