பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருளதிகாரம் - களவியல்

௱௭௩


வந்தவழி யெள்ளியதற்குச் செய்யுள்:—

"கண்டிரண் முத்தம் மயக்கு மிருண்முந்நீர்ப்
பண்டங்கொ ணாவாய் வழங்கும் துறைவனை
முண்டகக் கானலுட் கண்டே னெனத்தெளிந்தே

னின்ற வுணர்விலா தேன்.” [ஐந்திணையெழு - ௬௧]

[இதனுள்] பின்னும் வருவன் என்றிருந்தேன்; அதனான் எள்ளினேன்' என்பது கருத்து.

ஏறிரங் கிருளிடை யிரவினிற் பதம் பெறாஅன் மாறினெ னெனக்கூறி மனங்கொள்ளுந் தானென்ப கூடுதல் வேட்கையாற் குறிபார்த்துக் குரனொச்சிப் பாடோர்க்குஞ் செவியோடு பைதலேன் யானாக.” [கலித் - ௪௬] இஃது எள்ளினாயெ[ன்] நினைத்தான் என்றவழிக் கூறியது. விட்டுயிர்த் தழுங்கியதற்குச் செய்யுள்:-- "பிணிநிறந் தீர்ந்து பெரும்பணைத்தோள் வீங்க மணிமலை நாடன் வருவன்கொ றோழி கணிநிற வேங்கை மலர்ந்துவண் டார்க்கு மணிநிற மாலைப் பொழுது.” [திணைமொழி - ௬] [எனவும்,] "மரையா வுகளு மரம்பயில் சோலை யுரைசார் மடமத்தி யோடி யுகளுந் புரைதீர் மலைநாடன் பூணேந் தகல முரையா வுழக்குமென் னெஞ்சு.” [கைந்நிலை - ௬] என[வும்] வரும். நொந்து தெளிவொழித்தற்குச் செய்யுள்:— "மன்றத் துறுகற் கருங்கண் முசுவுகளுங் குன்றக நாடன் றெளித்த தெளிவினை நன்றென்று தேறித் தெளிந்தேன் றலையளி யொன்றுமற் றொன்று மனைத்து." [ஐந்திணையெழு - ௯] எனவரும் அச்சம் நீடினும் என்பதற்குச் செய்யுள்:— 'மென்றிணை மேய்ந்த தறுகட் பன்றி வன்க லடுக்கத்துத் துஞ்சு நாட னெந்தை யறித லஞ்சிக்கொ லதுவே மன்ற வாரா மையே.” [ஐங்குறு - ௨௬௧]

[எனவும்,]