உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

௩௭௬ தொல்காப்பியம் - இளம்பூரணம்

டொல்லொலை யோடு மலைநாடன் றன்கேண்மை சொல்லச் சொரியும் வளை.” [கைந்நிலை - எ] எனவரும். மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தற்குச் செய்யுள்:— பலவம் பழம்பெற்ற பைங்கட் கடுவ னிலவென் றிணைபயிரு 1மேகல்சூழ் வெற்பன் புலவுங்கொ றோழி புணர்வறிந் தன்னை செலவுங் கடிந்தாள் புனத்து.” [திணைமொழி - ௰] எனவும், “பொழுது மெல்லின்று பெயலு மோவாது கழுதுகண் பனிப்ப வீசு மதன்றவைப் புலிப்பற் றாலிப் புதல்வர்ப் புல்லி 2யன்னா யென்னு மன்னையு மன்னோ வென்மலைந் தனன்கொ றோனே தன்மலை யா[ர] நாறு மார்பினன் மாரி யானையின் வந்துநின் றோனே." [குறுந் - ௱௬௧] [எனவும் வரும்.] இவையெல்லாம் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தபின் நிகழ்வன. உள்ளப்புணர்ச்சியான் உரிமை பூண்டிருந்தவரும் இவ்வாறு கூறப்பெறும் என்று கொள்க: ஆண்டு மனநிகழ்ச்சி ஒருப்பட்டு நிற்றலின்.

உயிராக்காலத் துயிர்த்தலு முயிர்செல என்பது - இவ்வாறு கூறாக்காலத்து உயிர்செல்லுமாறு சொல்லுதலும் என்றவாறு.

ஈண்டு, உயிர்த்தல் என்பது சுவாதம் எனினும் அமையும். இந்நிகழ்ச்சியைத் தோழிக்கு நாணத்தால் உரையாளாயின் நோயட வருந்தும் என்றவாறு. உதாரணம்:— தழையணி யல்கு றாங்கல் செல்லா நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக வம்மெல் லாக நிறைய வீங்கிய கொம்மை வரிமுலை செப்புட னெதிரின 3யாங்கா குவள்கொல் பூங்குழை யென்னு மவல நெஞ்சமொ டுசாவாக் கவலை மாக்கட்டிப் பேதை யூரே." [குறுந் - ௱௫௯] இது யாங்காகுவளென உயிர்செலவு குறித்து நின்றது. "இன்ன ளாயின ணன்னுத லென்றவர்த் துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே நன்றுமன் வாழி தோழிநம் படப்பை நீர்வார் பைம்புதற் கலித்த மாரிப் பீரத் தலர்சில கொண்டே. [குறுந் - ௯௮] எனவரும்.(பிரதி)-1. மெக்கல். 2. மினா. 3. குவன் கொல் பூங்குழை யெண்ணு. 4. னென, 5. தலர்சிலர்.