பொருளதிகாரம் - களவியல் ௱௭௭
வேற்று வரைவு - தன்பிழைப்பாகத் தழீஇத் 1தேறலும் என்பது—வேற்று வரைவு வரின் அது மாற்றுதல் முதலாகத் தமர் தற்காத்த காரணப்பக்கம் ஈறாக நிகழும் வழித் தன்குறி தப்பித் தலைவன் எதிர்ப்படுதலில்லாக் காலத்து வந்தவன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித் தன்குறையாக வுடம்பட்டுத் தேறுதலும் என்றவாறு.
ஆண்டுக் கலக்கமின்றித் தேறுமென்பது கூறினாராம்.
அவ்வழி, வேற்று வரைவுவரின் அது மாற்றுதற்கண்ணும் என்பது—பிறனொருவன் வரையவரின் அதனை மாற்றுதற்காகவும் தன்குறி தப்பும் என்றவாறு.
[நெறிப்படு - மறைப்பினும் என்பது—கூட்டமுண்மை வழக்கியலால் நாடுகின்ற காலத்து மெய் வேறுபாடு நிகழ்ந்துழி தோழி அறியாமலுஞ் செவிலி அறியாமலுந் தலைவி மறைப்பினும் என்றவாறு.]
பொறியின் - இயல்பின் கண்ணும் என்பது—பொறி யென்பது ஊழ். ஊழாற் கட்டப்பட்ட புணர்ச்சியைக் குறித்து ஒற்றுமைப்பட்ட நண்பினானே தலைவன் வரைதற்குக் குறையுறுகின்றதனைத் தெளிந்த தலைவி செய்தற்கு அருமையமைந்த எண்வகையினாற் பெருமையியைந்த இயல்பினளாகி நிற்றற்கண்ணும் என்றவாறு.
எண்வகையாவது மெய்ப்பாட்டியலுள் மனன் அழிவில்லாத கூட்டம் என ஓதுகின்ற,
'முட்டுவயிற் கழறன் முனிவுமெய்ந் நிறுத்தல் அச்சத்தி னகற லவன்புணர்வு மறுத்தல் தூதுமுனி வின்மை துஞ்சிச் சேர்தல் காதல் கைம்மிகல் கட்டுரை யின்மை' [மெய்ப்பாட் - ௨௩] என்பன. அவற்றுள்,
முட்டுவயிற் கழதல் ஆவது—களவொழுக்கம் நிகழாநின்றுழி நிலவு வெளிப்பாடு, காவலர் கடுகுதல், தாய் துஞ்சாமை, ஊர் துஞ்சாமை, தலைவன் குறிவருதற்கு இடையீடுபடுதல்; இவ்வழிக் களவொழுக்கத்தினாற் பயனின்மை கூறல். அவ்வாறு கூறி இனி இவ்வொழுக்கம் அமையுமென வரைந்தெய்துதல் காறும் புணர்ச்சியை விரும்பாது கலக்கமின்றித் தெளிவுடையளாம்.
முனிவு மெய்ந்நிறுத்தல் ஆவது—இவ்வொழுக்கத்தினான் வந்த துன்பத்தைப் பிறர்க்குப் புலனாகாமை மெய்யின் கண்ணே நிறுத்தல்.
அவ்வழியும் வரைந்தெய்தல் சான்றமையும் புணர்ச்சியெனக் குறிவழிச் செல்லாளாம்.
அச்சத்தின் அகறல் ஆவது—இதனைப் பிறரறிவர் என்னும் அச்சத்தினானும் குறிவழிச் செல்லாளாம்.
அவன்புணர்வு மறுத்தல் ஆவது—தலைவன் புணர்ச்சி யில்வழியும் குறிவழிச் செல்லாளாம்.
தூது முனிவின்மை ஆவது—அவ்வழித் தலைவன்மாட்டுத் தூதாகிவருஞ் சொற்கேட்டலை முனிவின்மை.
துஞ்சிச் சேர்தல் ஆவது—உறங்காமையின்றி யுறக்கம் நிகழ்தல்.
காதல் கைம்மிகல் ஆவது—இவ்வாறு செய்யுங் காதல் அன்பின்மையன்றி அன்பு மிகுதல்.{பிரதி)-1.தேறுதலும், - - - - - - -