பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருளதிகாரம் - களவியல் ௱௭௯

பிணிகோ ளருஞ்சிறை யன்னை துஞ்சிற் றுஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவ ரிலங்குவே லிளையர் துஞ்சின் வையெயிற்று வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழு மாவலாய் ஞமலி மகிழாது மடியிற் பகலுரு வுறழ்நிலாக் கான்று விசும்பி னகல்வாய் மண்டில நின்றுவிரி யும்மே திங்கள்கல் சேர்பு கனையிருண் மடியி னில்லெலி வல்சி வல்லாய்க் கூகை கழுதுவழங் கியாமத் தழிதகக் குழறும் வளைக்கட் சேவல் வாளாது மடியின் மனைச்செறி கோழி மாண்குர லியம்பு மெல்லா மடிந்த காலை யொருநா ணில்லா நெஞ்சத் தகர்வா ரலரே, யதனா லரிபெய் புட்டி லார்ப்பப் பரிசிறந் தாதி போகிய பாய்பரி நன்மா நொச்சி வேலித் தித்த னுறந்தைக் கன்முதிர் புறங்காட் டன்ன] பன்முட் டின்றாற் றோழிநங் களவே.” [அகம் - க௨௨] எனவரும்.

முனிவு மெய்ந்நிறுத்தற்குச் செய்யுள்:— "நோமே நெஞ்சே நோமே நெஞ்சே யமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி யமைதற் கமைந்தநங் காதல ரமைவில் ராகுத னோமே நெஞ்சே." [குறுந் - ௪] எனவரும். அச்சத்தின் அகறற்குச் செய்யுள்:— "பேணுப பேணார் பெரியா ரென்பது நாணுத்தக் கன்றது காணுங் காலை யுயிரோ ரன்ன செயிர்தீர் நட்பி னினக்கியான் மறைத்தல் யா[வ]து மிகப்பெரி தழிதக் கன்றாற் றானே கொண்கன் யான்யா யஞ்சுவ லெனினுந் தானெற் பிரிதல் சூழான் மன்னே யினியே கான லாய மறியினு மானா தல[ர்]வந் தன்றுகொ லென்னு மதனாற் புலர்வது கொல்லவ னட்பென வஞ்சுவ றோழியென் னெஞ்சத் தானே." [நற்றினை - எ௨] எனவரும்,

அவன்புணர்வு மறுத்தற்குச் செய்யுள்:— யாரு மில்லைத் தானே கள்வன் றானது பொய்ப்பின் யானெவன் செய்கோ