பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

௱௮௰ தொல்காப்பியம் - இளம்பூரணம்

தினைத்தா ளன்ன சிறுபசுங் கால வொழுகுநீ ராரல் பார்க்குங் குருகு முண்டுதா மணந்த ஞான்றே.” [குறுந் - உ௫] எனவரும்.

தூது முனிவின்மைக்குச் செய்யுள்:— . புல்வீ ழிற்றிக் கல்லிவர் வெள்வேர் வரையிழி யருவியிற் றோன்று நாடன் தீதி னெஞ்சத்துக் கிளவி நம்வயின் வந்தன்று வாழி தோழி நாமு நெய்பெய் தீயி னெதிர்கொண்டு தாம்வரைந் தனையமென விடுகந் தூதே.” [குறுந் - ௱௬] எனவரும், துஞ்சிச் சேர்தற்குச் செய்யுள் வந்தவழிக் காண்க.

காதல் கைம்மிகுதற்குச் செய்யுள்:— கன்று முண்ணாது கலத்தினும் படாது நல்லான் றீம்பா னிலத்துக் காஅங் கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது பசலை யுணீஇயர் வேண்டுந் திதலை யல்குலென் மாமைக் கவினே. [குறுர் - உஎ] எனவரும்.

கட்டுரையின்மைக்குக் கூற்று நிகழாது. பொய்தலையடுத்த மடலின்கண் தலைமகள் கூறிய செய்யுள் வந்தவழிக் காண்க.

கையறு தோழி கண்ணீர் துடைத்தற்குச் செய்யுள்:— "யாமெங் காமந் தாங்கவுந் தாந்தங் கெழுதகை [மை]யி னழுதன தோழி கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர் மன்ற வேங்கை மலர்பத நோக்கி யேறா திட்ட லேமப் பூசல். விண்டோய் விடரகத் தியம்புங் குன்ற நாடற் கண்டவெங் கண்ணே.'” [குறுந் - ௨௪க] எனவரும்,

வெறியாட்டிடத்து வெருவினாற் கூறியதற்குச் செய்யுள்:—. நம்முறு துயர நோக்கி யன்னை வேலவற் றந்தன ளாயினவ் வேலன் வெறிகமழ் நாடன் கேண்மை யறியுமோ தில்ல செறியெயிற் றோயே. [ஐங்குறு - உ௪க] எனவரும்.

குறியின் ஒப்புமை மருடற்குக் கூறிய செய்யுள்:— "அணிகடற் றண்சேர்ப்பன் நேர்ப்பரிமா பூண்ட மணியரவ மென்றெழுந்து போந்தேன் - [க]ணிவிரும்பு.