இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
பொருளதிகாரம் - களவியல் ளஅரூ
உம்மை எதிர்மறையாதலாற் கூறாமை பெரும்பான்மை.காலமும் என்றது இவ்வொழுக்கம் புறத்தார்க்குப் புலனாங் காலம். அக்காலத்துத் தோழி மத்தியடம்படாம லறிவிக்கும் என்றவாறு.
இனி,வரைவிடைவைத்த காலத்து வருத்தமுற்றவழிக் கூறிய செய்யுள்:-
புனவன் 1றுடவைப் பொன்போற் சிறுதினைக்
கடியுண் கடவுட் கிட்ட சில்குர
லறியா துண்டன மஞ்ஞை யாடுமகள்
வெறியுறு வனப்பின் வேர்த்துற்று நடுங்குஞ்
சூர்மலை நாடன் கேண்மை
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே (குறுந்-ளரூ]
எனவரும்.
வரையா நாளிடை வந்தோன் முட்டியவழித் தலைவி கூறியதற்குச் செய்யுள் :-
தாழை குறுகினுந் தண்ணந் துறைவனை
மழைமா னோக்கின் மடமொழி -நூழை
நுழையு மடமகன் யார்கொலென் றன்னை
புழையு மடைத்தாள் கதவு. [கைந்நிலை- ரூகூ]
எனவும்,
அறியா மையி யன்னை யஞ்சிக்
குழையன் கோதையன் குறும்பைந் தொடியன்
விழவயர் துணங்கை தழுவுகஞ் செல்ல
நெடுநிமிர் தெருவிற் கைபுகு 2கொடுமிடை
நொதும லாளன் [கதுமெனத் தாக்கலிற்]
கேட்டோ ருளர்கொ லில்லைகொல் போற்றென
3யாணது பசலை யென்றன னதனெதிர்
4நாணிலை யெலுவ வென்றுவந் திசினே
செறுநறும் விழையுஞ் செம்ம லோனெ[ன]
நறுநுத லரிவை போற்றேன்
சிறுமை பெருமையிற் காணாது துணிந்தே. {நற்றிணை-ருய]
எனவும் வரும். இதன்கண் என்றானென ஒருசொல் வருவிக்க.
உரையெனத் தோழிக்கு உரைத்தற்குச் செய்யுள்:-
பொன்னிணர் வேங்கை கவினிய பூம்பொழிலு
ணன்மலை நாட னலம்புனைய- மென்முலையாய்
போயின திந்நாள் புனத்து மறையினா
லேயினா ரின்னு மினிது. [ஐந்திணையைம்--யக]
எனவரும்.
இன்னும், 'உரையெனத் தோழிக் குரைத்தற் கண்ணும்' என்பதற்குத் தலைவற்கு உரையெனத் தோழிக்கு உரைத்தற் கண்ணும் என்றுமாம்.
(பிரதி) - 1. றொடவை. 2.கொடிமுடி. 3.யானது. 4. துணிலை யெறுவமென்றுவந். 24