உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் -இளம்பூரணம்

   ளஅகூ
   
         உதாரணம்:-
         

 " என்னைகொ றோழி யவர்கண்ணு நன்கில்லை
                      யன்னை முகனு 1மதுவாகும் - பொன்னலர்
                      புன்னையம் பூங்கான்ற் சேர்ப்பனைத் தக்கதோ
                      நின்னல்ல தில்லென் றுரை" .

[ஐந்திணையெழு -ருஅ]

        எனவரும்.
        

ளக்க.

   "உயிரினுஞ் சிறந்தன்று நாணே நாணினுஞ்
                     செயிர்தீர் காட்சிக் கற்புச்சிறந் தன்றெனத்
                     தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு
                     காமக் கிழவ னுள்வழிப் படினுந்
                     தாவி ன்ன்மொழி கிழவி கிளப்பினு
                     மாவகை பிறவுந் தோன்றுமன் பொருளே."

        இதுவும் அது.
        
        உயிரினும் நாண் சிறந்தது. அதனினுங் குற்றந் தீர்ந்த காட்சியினையுடைய கற்புச் சிறந்தது: என முன்னோர்கூற்றை யுட்கொண்டு தலைவனுள்ள விடத்துச் 2செல்லலும் வருத்தமில்லாச் சொல்லைத் தலைவி சொல்லுதலுமாகிய அவ்வகை பிறவுந் தோன்றும் அவை பொருளாம் என்றவாறு.
        
        மன் ஆக்கத்தின்கண் வந்தது. எனவே இவ்வாறு செய்தல் பொ[ரு]ளல்ல என்று கூற்ற்க என்றவாறு. இதனுள் நாணத்தினும் கற்புச் சிறந்த தென்றவாறு,
        
        நொதுமலர் வரைவு நோக்கிக் கூறுவது:-
        

  "அளிதோ தானே நாணே நம்மொடு
                   நனிநீ டுழந்தன்று மன்னே யினியே
                   வான்பூங் கரும்பி னோங்குமணச் சிறுசிறை
                   தீம்புன னெரிதர வீழ்த்துக் காஅங்குத்
                   தாங்கு மளவை தாங்கிக்
                   காம நெரிதரக் கைந்நில் லாதே. [குறுந் -ளசகூ]
                   'கோடீ ரிலங்குவளை நெகிழ நாடொறும்
                   பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி
                   யீங்கிவ ணுறைதலு முய்குவ மாங்கே
                   யெழுவினி வாழியென் னெஞ்சே முனாஅது
                   குல்லைக் கண்ணி வடுகர் முனையது
                   பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
                   மொழிபெயர் தே[எ]த்தாராயினும்
                   வழிபடல் சூழ்ந்திசி னவருடை நாட்டே."

[குறுந் - யக]

       இது காமக்கிழவ னுள்வழிப் படுதல்.
       
       தாவில் நன்மொழி கூறியதற்குச் செய்யுள்:-
       

  "மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
                   கொடியோர்த் தெறூஉ மென்ப யாவதுங்"


      (பிரதி) --1. மிந்தாளா நாமினிப்.  2. செல்லவும்