பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - களவியல்


              கொடிய ரல்லரெங் குன்றுகெழு நாடர்
              பசைஇய பசந்தன்று நுதலே
              ஞெகிழிய ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே   [குறுந் --அஎ]
          
   எனவரும்.
     
   ளகஉ.    நாற்றமுந் தோற்றமு மொழுக்கமு முண்டியுஞ்
              செய்வினை மறைப்பினுஞ் செலவினும் பயில்வினும்
              புணர்ச்சி யெதிர்ப்பா டுள்ளுறுத்து வரூஉ
              முணர்ச்சி யேழினு முணர்ந்த பின்றை
              மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது
              பல்வேறு கவர்பொரு ணாட்டத் தானுங்
              குறையுற்ற் கெதிரிய கிழவனை மறையுறப்
              பெருமையிற் பெயர்ப்பினு முலகுரைத் தொழிப்பினு
              மருமையி னகற்சியு மவளறி வுறுத்துப்
              பின்வா வென்றலும் பேதைமை யூட்டலு
              முன்னுறு புணர்ச்சி முறைநிறுத் துரைத்தலு
              மஞ்சியச் சுறுத்தலு முரைத்துழிக்கூட்டமொ
              டஞ்சாது கிளந்த விருநான்கு கிளவியும்
              வந்த கிழவனை மாயஞ் செப்பிப்
              பொறுத்த காரணங் குறித்த காலையும்
              புணர்ந்தபின்் னவன்வயின் வணங்கற் கண்ணுங்
              குறைந்தவட் படரினு மறைந்தவ ளருகத்
              தன்னொடு மவளொடு முன்னமுன் றளைஇப்
              பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினு
              நன்னயம் பெற்றுளி நயம்புரி யிடத்தினு
              மெண்ணரும் பன்னகை கண்ணிஇய வகையினும்
              புணர்ச்சி வேண்டினும் வேண்டாப் பிரிவினும்
              வேளாண் பெருநெறி வேண்டிய விடத்தினும்
              புணர்ந்துழி புணர்ந்த வறிமடச் சிறப்பினு
              மோம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணுஞ்
              செங்கடு மொழியாற் சிதைவுடைத் தாயினு
              மென்புநெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ
              யன்புதலை யடுத்த வன்புறைக் கண்ணு
              மாற்றது தீமை யறிவுறு கலக்கமுங்
              காப்பின் கடுமை கையற வரினுங்
              களனும் பொழுதும் வரைநிலை விலக்கிக்
              காதன்மிகுதி யுளப்படப் பிறவு
              நாடுமூரு மில்லுங் குடியும்
              பிறப்புஞ் சிறப்பு மிறப்ப நோக்கி