பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - களவியல் - உாய்க பெரும்பூட் பொறையன் பே(எ)முதிர் கொல்லிக் (கருங்கட் டெய்]வம் குடவரை யெழுதிய நல்லியற் பாவை யன்னவென் [மெல்லியற் குழமகள் பாடினள் குறினே.” [குறுர் - அக காம மேற் படுப்பினும் என்பது- தலைவிமாட்டுள தாகிய வேட்கை அளவிறப்பி னும் தோழியை வினாவும் என்றவாறு. "மணியுட் டிகழ்தரு நூல்போன் மடந்தை யணியுட் டிகழ்வதொன் றுண்டு.” (குறள் - 'த2. எ.க) அளவு மிகத் தோன்றினும் என்பது.--பெதும்பைப் பருவத்தளாதிய தலைவி புணர்ச்சியாற் கதிர்த்து வீங்குகின்ற முலையும் புதிதுற்ற கவினுங் கண்டவிடத்துச் தோழியை வினாவும் என்றவாறு. கண்ணிறைந்த காரிகைக் காய்பேர்தோட் பேதைக்குப் பெண்ணிறைந்த மாமை பெரிது.” (குறள் - த்உ 72) தலைப்பெய்து காணினும் என்பது-- தலைவனொரு தலைவியைத் தலைப்பெய்து காணினும் வினாவும் என்றவாறு. பெய்தென்பதனைப் பெயவெனத் திரிக்க, 'மிடையூர் பிழியக் கண்டரெனன்' (அகம்.- 15அ) னைவரும். கட்டினும் என்பது--கட்டு வைப்பித்தவழியும் அவர்சொற் கேட்டுத் தோழியை வினாவும் என்றவாறு. கழங்கினும் என்பது.--கழங்கு வைத்துழியும் அவர்சொற் கேட்டுத் தோழியை வினாவும் என் நவாறு. வெறியென விருவரு மொட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும் என்பது-- செவிலியும் நற்றாயும் பொருந்தியபக்கத்துக் கண்டு வெறியாவோ மென் றவழித் தலைவி செய்திக்கண்ணுந் தோழியை வினாவும் என்றவாறு, ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும் என்பது--வெறியாடிய சென் றவழி அதற் கழிவுறுவிடத்து வரினும் என்றவாறு. அஃதாவது: தின்னணங் கன்மை யறிந்து மண்ணார்ந்து கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி வேலன் வேண்ட வெறிமனை வந்தோய் கடவு ளாயினு மாக மடவை மன்ற வாழிய முருகே.” (நற்றிணை - ஈ.எ] எனத்தோழி கூறுதல். அவ்வாறு கூறியவழியும் காரண மென்னை யென வினாவும். காதல் கைம்மிகக் கனவி னாற்றலும் 5:'ன்பது--கரதன் மிகுதியால் தலைவனை யுள்ளிக் கனவின்கண். அரற்றுதற்கண்ணும் வினாவும். தோழியை வினாதலும் என்பது - இவை நிமித்தமாகத் தோழியை வினாதலும் என் றவாறு. எனவே களவலராதன் முதற் கனவின் மற்ற வீராக ஓதிய வொன்பது கிளவி