பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - களவியல் உாய்டு . இது, செவிலிக்கு உரியதோர் சிறப்பு உணர்த்துதல் நுதலிற்று. நல்ல பெரிய சிறப்பினையுடைய அறிதற் கரிய [மறைப்பொருள் யாவற்றையுங் கூறும் கடப்பாடுடைய ளாதலின்) தாய் எனப்படுவாள் செவிலியாகும் என் றவாறு. நற்றாய் இத்துணைச் சிறப்பிலள் என்றவாறு. இதனாற்பயன், களவுக்காலத்தையச் சொ செவிலித்தாய்க்குங் கைத் தாய்க்கும் பொதுவாயினும், தாயென்று வேண்டப்படுவாள் செவிலி என்றறிவித்தல். உக, தோழி தானே செவிலி மகளே, [இது, தோழிக்கு உரியதோர் சிறப்பு உணர்த்துதல் நுதலிற்று.) (களவுக்காலத்தும் இன்றிமையாளாகத் தலைவியால் வேண்டப்பட்டாள் செவிலி மகள் என்றவாறு. எனவே, பயின்றா ரெல்லாரும் தோழிய ராகார். அருமறை கிளக்கப்படுதலான் உடன் முலையுண்டு வளர்ந்த செவிலிமகனே தோழி எனப்படுவாள் என் றவாறு, அருமறை கிளத்தல் என்பதனை மீண்டு வருவிக்க. {கூடு) NT2.. சூழ்தலு முசாத்துணை நிலைமையிற் பொலிமே. இது, தோழிக்கு உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்ட தோழி தான் சூழ்தற்கும் தலைவி சூழ்ச்சிக்கு உசாத்துணையாகி யும் வரும் நிலைமையாற் பொலிவுபெறும் என்றவாறு. எனவே, செவிலிமகள் என்னும் துணையாற் பொலிவு பெறாள்; என்று(ந்) தோழி யாவாள் செவிலிமகளாதலேயன்றிச் சூழவும் உசாத்துணையாகவும் வல்லள் ஆதல் வேண் டும் என்றவாறு. செய்யுள் மேற்காட்டப்பட்டன. (ஙசு) உரு, குறையுற வுணர் தன் முன்னுற வுணர்த விருவரு முள்வழி யவன்வர வுணர் தெலென மதியுடம் படுத லொரு வகைத் தே. இது, தலைவன் புணர்ச்சியுண்மை தோழி அறியுந் திறன் பாகுபடுமாறு உணர்த்து தல் நுதலிற்று. தலைவன் குறையுற வுணர்தலும் அவன் குறையுறாவழித் தலைலி குறிப்புக் கண்டு உணர்தலும் தானும் தலைவியும் கூடியிருந் துழித் தலைவன் வந்தமை கண்டு உணர்தலும் என மூவகைத்துத் தோழி அறிவுடம்படுதற்கண்ண வென்றவாறு. மதியுடம்படுதல் எனினும் புணர்ச்சியுணர்தல் எனினும் ஒக்கும். இம்மூன்றினும் ஒன்று கண்டுழி அவரவர் குறிப்பினாற் புணர்ச்சியுணரும் - என்றவாறு. 'குறையு றவுணர் தல்' முன்வைத்தார். நன்கு புலப்படுதலின். ‘முன்னுறவுணர்தல்'. அதன்பின் வைத்தார், தலைவி வேறுபாடு கண்டு பண்டையிற்போலாள் என்னும் நிகழ்ச்சியான் முற்றத் துணி வின்மையின். இருவரு முள் வழி. யவன் வரவுணர்தல்' .அதன் பின்வைத்தார், ஆண்டுப் புதுவோன் போலத் தலைவன் வருதலானும் தலைலி காந்த உள்ளத்தீளாய் நிற்குமாதலா னும் அத்துணைப் புலப்பாடின்மையின். அக்கருத்தினானே மேற்சொல்லப்பட்ட தோழி. கூற்று ஆலவகையாகப் பொருள் உரைத்ததென்று கொள்க. உசு. அன்ன வகையா னுணர்ந்த பின் னல்லது பின்னிலை முயற்சி பெறாளென மொழிபு.