Br2) தொல்காப்பியம் - இளம்பூரணம் TF2. "பறைபடப் பனில் மார்ப்ப லிறைகொள்பு தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய நாலூர்க் கோசர் கன் மொழி போல வாயா கின்றே தோழி யாய்கழற் சேயிலை வெள்வேல் விடலையொடு தொகுவளை முன்கை மடந்தை நட்பே." [குறுந் - MG] (இதனுள் விட ையொடு மடர்தை நட்பு பறைபடப் பணிலமார்ப்ப விறைகொண்டு நாலூர்க் கோசர் சன்மொழிபோல வா[யா]யிற்று எனச் செவிலி நாய்க்குக் கூறினமை யானும், விடலை எனப் பாலை நிலத்திற் குரிய தலைவன் பெயர் கூறினமையானும் கொடுப் போரின்றியும் கரணம் நிகழந்தவாறு காண்க. (2.) மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங் கீழோர்க் காகிய காலமு முண்டே. இதுவும் அது. மேற்குலத்தாராகிய அந்தணர் அரசர் வணிகர் என்னும் மூன்று வருணத்தார்க்கும். புணர்த்த சரணம் கீழோராகிய வேளாண் மாந்தர்க்கும் ஆகிய காலமும் உண்டு என்றவாறு. இதனாற் சொல்லியது, முற்காலத்துக் கரணம் பொதுப்பட நிகழ்கலின் எல்லார்க் கும் ஆம் என்பதும் பிற்காலத்து வேளாண்மாந்தர்க்குத் தவிர்ந்ததெனவும் கூறியவாறு போலும். அஃதாமாறு தருமசாத்திரம் வல்லாரைக்கொண் இணர்க. (12) சங.. பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் காண மென்.. என்றது கரணமாகியவாறு உணர்த்துதல் நுதலிற்று. பொய்கூறலும் வழூஉப்பட வொழுகலும் தோன்றியபின்னர் முனைவர் கரணத் தைக் கட்டினார் என்று சொல்லர் என்றவாறு. இரண்டும் தோன்றுவது இரண்டாம் ஊழியின்கண் ணாதலின், முதலூழியிற் உகாரணமின்றியே இல்வாழ்க்கை நடந்ததென்பதூஉம் இலை தோன் றியபின்னர்க் க ரணந் தோன்றின தென்பதூஉம் கூறியவா ராயிற்று. பொய்யாவது செய்ததனை மறைத்தல், வழுவாவது செய்ததன் கண் முடியவில்லாது தப்பி 3யொழுகுதல். கீரணத்தொடு முடிந்த காவைவின் அவை யிரண்டும் நிகழாவாமாதலாற் கரணம் வேண்டுவதாயிற்று. கரணத்தி னமைந்து முடிந்த காலை நெஞ்சு தளை யவிழ்த்த புணர்ச்சிக் கண்ணும் எஞ்சா மகிழ்ச்சி யிறந்துவரு பருவத்தும் அஞ்ச வந்த வுரிமைக் கண்ணும் ஈன்னெறிப் படருங் தொன்னலப் பொருளினும் பெற்ற தேஎத்துப் பெருமையி னிலை இக் குற்றஞ் சான்ற பொருளெடுத் துரைப்பினும் நாமக் காலத் துண்டெனத் தோழி (பிரதி)-1. என்பதும். 2. கரணமின்றே. 3. வொழுகுதல்.. சச.
பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/87
Appearance