பக்கம்:1935 AD-ஆலயப்பிரவேச உரிமை.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை

 


‘Right of Temple Entry’ (ஆலயப் பிரவேச உரிமை) என்னும் ஆங்கில நூலுக்கு ஈரோடு தோழர் E. V. ராமசாமி அவர்கள் வரைந்துள்ள முகவுரை வருமாறு:-

சுயமரியாதை இயக்கப் பிரமுகர்களில் ஒருவரும் இயக்கத்துக்கே தூண்போல் பொலிபவருள் ஒருவருமான தோழர், பி. சிதம்பரம் பி. எ. பி. எல். (Travancore) அவர்கள் "கோவில் நுழைவு உரிமை" (Right of Temple Entry) என்னும் ஓர் அரிய ஆங்கில நூலை நம் பார்வைக்கு அனுப்பியுள்ளார். அது சுமார் 300-பக்கங்கள் கொண்டதோர் நூல். தோழர் சிதம்பரம் அவர்களைப்பற்றியும் அவரது ஆங்கில அறிவு, ஆராய்ச்சி , சட்ட நூல் தேர்ச்சி முதலியவற்றைப்பற்றியும் நம் நேயர்கள் சிறப்பாகவும், தமிழ்நாடு முழுவதும் பொதுவாகவும் உணர்ந்திருக்கும் காரணத்தால். அவற்றைப்பற்றி நாம் அதிகம் கூறவேண்டிய அவசியம் இருக்காது. இவ்வரிய நூல் இனிமேல் நமது தோழரவர்களது ஆராய்ச்சித்திறனையும், அறிவின் நுட்பத்தையும், எழுத்தின் திறனையும், நம் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி, இந்திய தேசம் முழுவதும் மெச்சும்படியானவிதமாகப் பரப்பும் என்பதில் சிறிதும் சந்தேகமே கிடையாது.

மேற்படி அரிய நூலின் முதற்பாகமாகிய பல அதிகாரங்கள் முன்பு நம் நாட்டில் உலவி வந்த (Revolt) "ரிவோல்ட்" என்னும் ஆங்கில வாரப் பத்திரிகையில் வாரந்தோறும் வெளிவந்தவையே ஆகும். அவைகளின் அபூர்வ குணங்களைக் கண்ட அறிஞரும் வாசகர்களும் அவற்றை முடித்து ஓர் புத்தகவடிவமாக்கி வெளியிடுமாறு வேண்டினர். அதன்மேல் நமது ஆசிரியர் அவற்றுக்குமேல் அதிகமாகப் பல இன்னும் அரிய பெரிய