பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள்—அறப்பால்.

களும் பெற்று வாழும் புதுக்கோட்டை மிட்டாதாரும் பெரிய நிலச்சுவான்தாரும், அதி தனவந்தரும், திருநெல்வேலி டிஸ்டிரிக்டு போர்டு அங்கத்தினரும், திருச்செந்தூர் திரு. சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான கெளரவ தருமகர்த்தருமாகிய திரு. அ.செ.சு. கந்தசாமி ரெட்டியா ராவர்களும், அவர்களது அவிபக்த அருமை மைத்துனரும், திருநெல்வேலி டிஸ்டிரிக்டு போர்டு அங்கத்தினரும், தூத்துக்குடி ஸர்க்கிள் தேவஸ்தானக் கமிட்டி வைஸ்பிரசிடண்டு மாகிய திரு. அ.செ.சு. முத்தைய ரெட்டியா ரவர்களுமே. எனது நண்பர்களிற் சிலர் என்னைப் பார்த்து, ‘நீங்கள் அதிர்ஷ்ட சாலிதான். மகாத்மா காந்திக்கு ஐமன்லால் பஜாஜி கிடைத்தது போல உங்களுக்கு ரெட்டியார்கள் கிடைத்திருக்கிறார்கள்" என்று சொல்வதுண்டு. அதற்கு "நானும் கடவுள் ஞானத்திலும், தேச பக்தியிலும், பாஷாபி மானத்திலும் குறைந்தவ னல்லவே" என்று பதில் சொல்வதுண்டு. அவ்விரு வள்ளல்களும் இன்னும் பல பெண்மக்களும் ஆண் மக்களும் பெற்றுப்பெருகி "வாழையடி வாழையென" இவ்வுலகின்கண் எஞ்ஞான்றும் இன்பமும் புகழும் எய்தி வாழ்ந்திருக்கும்படி யாகவும், அவர்கள் வீட்டு வாயில்கள் நித்திய கல்யாண வாயில்களாய் விளங்கும்படியாகவும் அருள்புரிய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை யான் இறைஞ்சுகின்றேன்.

தூத்துக்குடி. வ.உ.சிதம்பரம் பிள்ளை.
9—2—35.

viii