பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

திருவள்ளுவர் திருக்குறள். பகைவர்களுக்கு ஆண் சிங்கம் போன்றவன், வெதுப்பற... சூடாமணி ' -- துன்பம் நீங்க உலகம் பொதுவென்பது ஒழித்துத் தனியாகக் காக்கும் வலிமையுள்ள அரசர் குலத்தின் சிரோரத்தினம் போன்றவன், கழைகளி... வரையான்--கரும்புள்ளிகளை வெகுண்டு அழிக்கும் புள்ளிகள் பொருத்திய முகத்தையுடைய தேவேந்திரனது நல்ல (ஐராவதம்) என்னும் யானை விரும்பும் கற்பக மரத்தின் மெல்லிய குழைகளை நொடித்து, பெருமை பொருந்திய நல்ல சுவையை உடைய தேனில் தோய்த்து உண்ண, துதிக்கையை நீட்டக் குற்றமற்ற தேன் கூடுகள் நெருங்கிய சந்தனச் சோலையிடத்து விளங்கும், வென்ற புலன்களையுடைய குறிய முனிவனாகிய அகத்தியன் தன்னிடத்து, துன்பம் கெடுவதற்குச் சொல்லி வரம் பெறுவதற்காக ஆழமுடைய குளிர்ந்த சுனையில் கண்ணே மூழ்கித் தேவ மகளிர் அரக்குப் போன்ற சிவந்த நிறத்தை புடைய தமது கைகளை விரித்து இரப்பதை ஒப்ப வடுப் படாத சாந்தீட் பூங் கொத்துப் போலப் பொலிந்த அழகிய பழைய செந் தமிழ் மணக்கும் பொதிகை என்னும் பெரிய மலையை உடையவன், விரவிய ....நதியான் -- கூடிய தேவர்கள் துதிக்க இரண்டு அடிகளால் மூவுலகங்களையும் அளந்த அடைவதற்கு அரிய செடிய திருமால், வலிய திறனையும் பிளந்த வாயையும் உடைய பன் றியின் உருவத் தைக் கொண்டு, அழகிய பூமியுட் புகுந்து தேடியும் காணாத அருள் நிறைந்த உமாதேவியாகிய பச்சைக் கொடியானது ஒரு பக்கத்தில் படர்ந்துள்ள மூன்று கண்களையுடைய கரும்பைப் போல் இனிக்கும் சிவபிரானின், சிவந்த தாமரை போன்ற அடிகளைக் கரையினிடத்தே பொருந்திக் குற்றம் நீங்க மணம் வீச, நன்மை வாய்ந்த கெலனியர் குலத்தில் அவதரித்த திருஞானசம்பந்த நாயனார் எழுதியிட்ட பழைய வேதத்தைத் தன்னிடத்தே கொண்டு மணக்கும் தெய்வத் தன்மை பொருத்திய வெள்ளிய அலைகளை எறிகின்ற வைகை என்னும் பெரிய நதியை யுடையவன், கரியனி... செம்பிசன், னாடன்- புள்ளிகளை

94

94