பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப் பாயிரம்.

யுடைய வண்டுகள் மிதிப்பதனால் புரிமுறுக்கு அவிழ்ந்த மணம் கமழ்கின்ற தாமரை மலர்கள் இன்பம் செய்கிறவர்களுக்கும் மன மகிழ்சியோடு உதவும் தகுதியுடையாரைப் போல முக மலர்ச் சொரியும் குற்றமற்ற செந்தேன் பெருகி, இனிய கரும்புத் தோட்டத்துட் சென்று, சுருண்ட முகத்துடைய சங்குகள் தவழ்கின்ற அழகிய மடைகளை உடைக்க, வாசனை பொருந்திய பூந் தாதுக்களைச் சொரிந்து அணை செய்யும், கீழ் நோக்கித் தொங்கும் பூங்கொத்துக்களையுடைய இனிய மாஞ் சோலையைப் பக்கத்தே கொண்ட நெருங்கிய வளத்தால் விளங்குகின்ற செம்பு நாடு என்னும் நல்ல நாட்டை உடையவன், பூநத முளரி...நகரான்—ஆண்யாற்றின் தாமரைகளையுடைய மானதத் தடாகம் என்று தேவரும் சந்தேகிக்கும் வண்ணம் பூவளையங்களை வெண்மை பொருத்திய சிறகுகளையுடைய அன்னப் பறவைகள் உண்ண எக்காலத்தும் விருந்தளிக்கின்ற அழகிய தடாகங்கள் செருங்கிய செல்வத்தையுடைய புதுமை என்னும் பெரிய நகரத்தை யுடையவன், உலம் பொரும்.. மாலிசையான்—துணை ஒக்கும் குற்றம் இல்லாத வெற்றி பொருந்திய தோள்களில் தங்குகின்ற வீர இலக்குமி மகிழ்ச்சியோடு புன்னகை பூத்தது போல யாரும் விரும்பும்படியாகத் தரித்த வண்டுகள் சிக்காதிருக்கும் முல்லை மாலையையுடையவன், மரவரி அந்தணன்... பரியான்—மரவுரி தரித்த (துருவாச முனிவன் மீண்டும் உள்ளத்தில் வெகுளின் தடுக்கும் வலிமையனல்லன் சுடரையுடைய நெருப்பைக் கக்குகின்ற வயிர வாளாகிய படைக்கலத்தையுடைய தேவேந்திரன் என்று அறிந்து, அவனை விட்டு நீக்கி இந்நகரத்தில் வந்தது உச்சைச் சிரவம் என்னும் குதிரை, இஃது உண்மைதான் என்று பார்த்தோரெல்லாம் வாய் திறந்து சொல்லும்படியாகச் சிறந்து, கண்களைக் கவரும் அழகுடனே சுழியையும் கொண்ட தாவுகின்ற குதிரையையுடையவன், தன்னுடன்... களிற்றான்—தன்னோடு வெகுண்டு போர் செய்த தெய்வந்

95