பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Expression error: Unrecognized word "oddpage".


திருவள்ளுவர் திருக்குறள்

சரிய நிலையை யுடையவன் கற்பனைக்கு அப்பாற்பட்ட சிற்பரஞ் சுடரினது நாள்களைக் கனவிலும் நனவிலும் நீங்காத மனத்தை யுடையவன், பழிதரு... பொருட்டு-பழியைத் தருகின்ற முத்தி வகைகளையெல்லாம் விடுத்து, அழிவில்லாத பேரின்பத்தைத் தரும் முத்தியை எளிதில் யாவர்க்கும் தெரிவித்து, குற்றமற்ற இன்பத்தைச் 'செய்கின்ற சைவ சித்தாந்த உண்மையை உணர்த்தும் நூல்களைச் சந்தேக விபரீதங்கள் நீங்க மனத்தில் நன்கு உணர்ந்தோன், செயலற்ற தன்மையி லிருந்து நீங்கிய கருணையாகிய அழகிய கடல் போன்றவன், சொல்லும் புகழை யெல்லாம் கொள்ளும் ஆறுமுக நாவலன் விரிந்த மகிழ்ச்சியோடு அச்சிற் பதிப்பித்தனன், விரிந்த உலகத்தில் விளங்குதல் நிமித்தம்.

அகலம். ஏகாரம் ஈற்றசை- மலர், குலவு, ஏனை, அடு, பவர், சால், அறு, செய், அகல், இயல், கனி, உறு, விழை தரு, தோய், செறு, அவர், தமழ், எறி, கவிழ், பொலி, நுதைதரு, கவர், உறழ், ஆர், நிலவு, செழு, நிறைதரு, பொரு, நிகழ்தரு, உதவிடு, புதை, விரி, மன்னு என்பன வினைத் தொகைகள், குலவுதல்-பொருந்தல், கோதை- (பூ)மாலை, வீற்று வீற்றாக- தனித்தனியாக, விழுத்தக -சிறப்புற, புத்தேள் -தேவன். வளமை- வளப்பம், பாயிரம்- வரலாறு-முறையாக வருகின்ற, பருப் பொருள்-நுட்பமற்ற பொருள், மை-குற்றம். தப-நீங்க, பவர்- பெருங்கிய, பனவர்- பார்ப்பார். ஏற்பு- பொருத்தம், திருகு - மாறுபாடு, காகிதம்-கையால் எழுதப்பட்ட ஏடு, துருவுதல்-தேடுதல், வணங்கலர்- பகைவர். பன்னகம்-பாம்பு. ககம்- மலை, சூடாமணி-முடிமணி, புழைக்கரம்-துதிக்கை . இறால்-கூடு. துறுமிய-நெருங்கிய, அரந்தை- துன்பம், பாக்கு- பொருட்டு. அர மகளிர்-தேவமகளிர். துடுப்பு-(பூங்)கொத்து. பரவ -தொழ. வன்றி-பன்றி, கடுப்ப-ஒப்ப. உவட்டு- பெருக்கு,

98

98