உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப் பாயிரம்.

________________

சிறப்புப் பாயிரம்

' படப்பை--கொல்லை துணர்- கொத்து, சிறகர்-சிறகுகள், துதைதல் - நெருங்கல். உலம் -திரண்ட. கல்-மலை, வாவும்-தாவும். கொற்றவை -வீரஇலக்குமி. தகைக்கும் - தடுக்கும். உச்சைச் சிரவம்-தேவேந்திரன் குதிரை. கொன்-அச்சம், அகைப்பு-வருத்தம்,வாய் வெரீஇ-வாயலறி, வட்கி-வெட்கி,துவன்றிய -நெருங்கிய, அடையலர்-பகைவர்,இரட்டுதல்- ஒலித்தல். நலத்தல் -சிந்தித்தல். பீடு-பெருமை. குலவுதல்.- மகிழ்தல், தாரு -தரு; ' தரு' என்பது முதல் நீண்டு ' தாரு' என நின்றது. அதுலம்-- உவமையின்மை , அதுல-- ஒப்பற்ற எறுழ்--வலி; எறுழ்வலி-- மிக்க வலி.கோதனங்கள்...பசுக்கன்றுகள், புதை இருள்--மறைக்கும் இருள், புதை பட-- மறைக்கப்பட, குது கலிப்பு-உவகை, நயக்க--விரும்ப, பொதி-மலரரும்பு சடிலம்- சடை, பழிச்சல்-துதித்தல், பொருட்டு- கொட்டை, வாக்குதல்-- வார்த்தல், துரிசு-- குற்றம், பளகு--குற்றம், கையறவு- செயலறல்; ஒழுக்க மின்மை , உஞற்றல் - செய்தல், கஞறல்-பொலிதல், கஞவிய- பொலிந்த, கௌணியர்- பிராமணரில் ஒரு கோத்திரத்தார். இமையாத, கோடாத, கழவாத என்பன ஈறு கெட்டு நின்றன. ' கொண்டு+ இறுமாந்து' என்பதில் ' 'கொண்டு ' என்பதன் இடை கெட்டுக் 'கொடு' என்றாகி, அதன் உகரம் கெட்டுக் ' கொடிறுமாந்து' என்றாயது. பன்றி என்பது வன்றி என மருவி நின்றது. இப்பா வியற்றியவர் மகா வித்தமான் மீனாச்சிசுந்தரம் பிள்ளையவர்கள் மாணாக்கரும், வீரச் செட்டியார் குமாரரும் ஆவர்.

கருத்து. முந்திய செய்யுளின் கருத்தையே இதன் கருத்தாகவும் கொள்க ,

சிறப்புப் பாயிரம் முற்றிற்று.

99