பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடைப் பாயிரம்.

நின்றது. மணக்குடவர் பாடம் ' இல்லா னடிசேர்ந்தார் ', 'இடும்பை யிலர்', நச்சர் பாடம் ' இல்லான்', கருத்து. கடவுளை உணர்ந்தார்க்கு யாண்டும் துன்பம் இல்லை, 4. ரு, இருள்சே ரிருவினையும் சேரா

                        யிறைவன்
  பொருள். இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு--இறைவனது அருளைச் சேர்ந்த (வர் என்ற) புகழைச் செய்தா ரிடத்து, இருள் சேர் இரு வினையும் சேரா-அறியாமையால் உண்டாய (நல்வினை தீவினை என்னும்) இரண்டு வினைகளின் பயன்களும் பொருந்தா.
 அகலம். 'சேர்' இரண்டும் வினைத்தொகைகள், இறைவனுக்குப் பொருள் அருளே யாம், வினை என்பது ஆகுபெயர், அதன் பயனுக்கு ஆயினமையால், 'இருள்' மூன்றாம் வேற்றுமைத் தொகை, தாமத்தர் பாடம் 'இருவினையும் சேரா திறைவன்'. இரு வினைப் பயன்களாவன, பிறப் பிறப்புக்கள், ' இருவினை ' நல் வினை தீவினை யென்றும், அவற்றில் நல்வினை பொன் விலங்கையும், தீவினை இரும்பு விலங்கையும் ஒக்கு மென்றும் உரைப்பாரும் உளர். நல்வினையே அற மென்றும், அது வீட்டையும் அளிக்கு மென்றும் - இந்நூலாசிரியரும் பிற பன்னூலாசிரியர்களும் கூறுகின்றமையால், நல்வினையைப் பொன் விலங்கிற்கு ஒப்பிடுவது பொருத்த மன்று,

கருத்து. - `கடவுள் அருளைப் பெற்றாரை இருவினைப் பயன்களும் சேரா. கூ, பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்.

103

103