பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடைப் பாயிரம்

அகலம். தண்மை -தண்ணளி- அருள், முன்னர் அற ஆழியைக்'கூறிப் பின்னர்ப் பிற ஆழி' என்றமையால், 'பிற ஆழி' என்பதற்கு மறக் கடல் என்று பொருள் உரைக்கப்பட்டது. மரங்கள் பல திறத்தன வாகலான் 'பிற' ஆழி என்றார். 'பிற ஆழி' என்பதற்குப் பொருளும் இன்பமுமாகிய ஆழிகள் என்று உரைப்பாரும் உளர். நச்சர் பாடம் 'தான்சேர்ந்தா ரல்லார்',

கருத்து. கடவுளை உணர்ந்தவர் பாவக் கடலைக் கடப்பர்.

8.

கூ. கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
றாளை வணங்காத் தலை.

பொருள். எண் குணத்தான் தாளை வணங்கா (த) தலைஎட்டுக் குணங்களை உடையவனது அடிகளைத் தொழாத தலைகள், கோள் இல் பொறியின் குணம் இல-(தத்தம் புலன்களைக்) கொள்ளுதல் இல்லாத பொறிகளைப் போலப் பயன் இல்லாதவை

அகலம். ' இன்' உருபு உவமைப் பொருளில் வந்தது. ஏகாரம் ஆசை, 'கோள்' முதனிலை திரிந்த தொழிற் பெயர், வணங்காத என்பது ஈறு கெட்டு நின்றது. பொறி, குணம், தாள், தலை என்பன சாதி ஒருமைப் பெயர்கள், எட்டுக் குணங்களை யுடையவன் ஒரு மதக் கடவுள். எண் குணத்தான் என்பதற்குச் சைவாகமத்தில் கூறியுள்ள தன் வயத்தனாதல் முதலிய எட்டுக் குணங்களை உடையவனாகவும், ஆருகத காலில் கூறியுள்ள கடையிலா வறிவு முதலிய எட்டுக் குணங்களை உடையவன் எனவும், அணிமா முதலிய எட்டுக் குணங்களை உடையவன் எனவும் உரைப்பாரும் உளர். 'எண் குணத்தான்' என்பதற்கு ஒருவன் என்றும் குணங்களை யெல்லாம் உடையான் என்று உரைப்பிலும் அமையும்.

கருத்து. கடவுளை வணங்காத தலைகள் பயனில்லாதவை, 9.

105