பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்.

ய.பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா
ரிறைவ னடிசேரா தார்.

பொருள். பிறவிப் பெருங் கடல் நீந் துவர் (இறைவனடி சேர்ந்தார்)-பிறவியாகிய பெரிய கடலைக் கடப்பர் தலைவனது அடிகளைச் சேர்ந்தவர்; நீந்தார் இறைவன் அடி சேராதார்- கடவார் இறைவனது அடிகளாச் சேராதவர்,

அகலம்.'இறைவனடி சேராதார்' என்பது சொல்லெச்சம். பிறவிக் கடலைக் கடப்பதற்குத் துணையாகும் புணைக்கு - இறைவன் அடியை உவமித்தார். மணக்குடவர், தாமத்தர் பாடம் 'சேராதவர்'

கருத்து கடவுளைச் சேர்ந்தவர்க்குப் பிறப்பு இல்லை. 10.

இரண்டாவது அதிகாரம்-வான் சிறப்பு.

அஃதாவது, மழையினது பெருமை.

க. வானின் றுலகம் வழங்கி வருதலாற்
றானமிழ்த மென்றுணரற் பாற்று.

பொருள். வான் நின்று உலகம் வழங்கி வருதலான்- மழையினின்று உலகம் நிலவி வருதலால், தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று-அஃது அமிழ்தம் என்று அறிதல் பான்மைத்து,

அகலம். பான்மைத்து- தன்மைத்து. 'தான்' என்பது அது என்னும் பொருள் தந்து நின்றது. அமிழ்தம் - சாவாமையை நல்கும் மருந்து. ' வான் நின்று ' என்பதற்கு ' மழை இடையறாது நிற்ப' என்றும், 'நிற்ப' என்பது 'நின்று ' எனத் திரிந்து நின்றது என்றும் உரைப்பாரும் உளர். தருமர் பாடம் 'தானமுத மென்

106