பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடைப் பாயிரம், ' றுரைக்கும் பாற்று', மணக்குடவர் பாடம் 'உணரும் பாற்று', நச்சர் பாடம் ' தானமிர்த மென்றுரைப்பார்'.

கருத்து. மழை அமிழ்தத்தை ஒக்கும். • 11. உ. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉ மழை! பொருள். துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி-உண்பார்க்கு தூய்மையான உணவை உண்டாக்கி, துப்பார்க்கு துப்பாயதும் -உண்பார்க்கு உணவாயதும், மழை - மழை நீர். அகலம். உ.கா . அளபெடை இசை நிறைக்க வந்தது. மணக்குடவர், தாமத்தர் பாடம் 'துப்பாவதூஉம்'. மத்தைய மூவர் பாடம் 'துப்பாயதூஉம்'. கருத்து. உணவை அளிப்பதும் உணவாவதும் மழை, 12.ங. விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத் துண்ணின் றுடற்றும் பசி. பொருள், விண் நின்று பொய்ப்பின்--மேகம் (மழையைப் பெய்யாது) நிலைத்துப் பொய்ப்பின், பசி விரி நீர் வியன் உலகத்துள் நின்று றுடற்றும்-பசி கடல் சூழ்ந்த பெரிய உலகத்து உயிர்கள் மாட்டு நிலைத்து வருத்தும். அகலம். விரி என்பது வினைத்தொகை, விரி நீர் என்பது ஆகுபெயர், விரிந்த நீரையுடைய கடலுக்கு ஆயினமையால், உலகம் என்பது ஆகுபெயர், உலகத்திலுள்ள உயிர்களுக்கு ஆயினமையால். கருத்து. மழை இல்லையேல், உயிர்கள் பசியால் வருந்தும். 13. ச. ஏரி ணுழாஅ ருழவர் புயலென்னும்

வாரி வளங்குன்றிக் கால்.

107