பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்.

தேவர்களுக்கும் விழாவும் பூசை நடவாது. அகலம். பூசை-நாள் தோறும் நடக்கும் பூசை, சிறப்பு-- காரணம் பற்றி நடக்கும் திரு விழா, வறளல்-காய்தல். உம்மை இறந்தது தழீய எச்சம். கருத்து. மழை இல்லையேல் தேவர் வழிபாடும் இல்லை.18. சு. தானந் தவமிரண்டுந் தங்கா

            வியனுலகம் வானம் வழங்கா தெனின். பொருள். வானம் வழங்காது என்னின் -- மேகம்ம் (மழையை) நல்காது என்றால், வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா--பெரிய உலகத்தின்கண் தானம் தவம் (என்னும்) இரண்டும் (நிலை) நில்லா .

அகலம். தானம் - நல்லார்க்கு ஈதல். ஈகை--இல்லார்க்கு ஈதல், இல்வாழ்வார் அறங்களில் சிறந்தது தானம், துறந்தார் ஒழுக்கங் களில் சிறந்தது தவம். நச்சர் பாடம் ' வியனுலகம் வானம் வழங்கா விடின்', கருத்து. மழை இல்லையேல் இல்லறமும் துறவறமும் நடவா. 4. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு. பொருள் நீர் இன்று உலகம் அமையாது எ(ன்)னின் - நீர் இல்லாமல் உலகத்து உயிர்கள் (நிலை) நில்லா என்றும், வான் இன்று யார் யார்க்கும் ஒழுக்கு அமையாது -- மழை இல்லாமல் இல்வாழ் வார்க்கும் துறந்தார்க்கும் (அவர்) ஒழுக்கம் (நிலை) நில்லாது.

அகலம். நீர் இல்லாமல் உலகம் நிலை நில்லா தென்பது யாவர்க் கும் உடன்பா டென்றால், மழை இல்லாமல் யாரிடத்தும் ஒழுக்கம்

110