பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடைப் பாயிரம்.


நிலை நில்லா தென்பதும் யாவர்க்கும் உடன்பாடாம் என்ற வாறு. 'ஒழுக்கு வானின்றி யமையாது' என்பதற்கு மழை நீ ரொழுக்கு வானை யின்றி யமையாது' என்று உரைப்பாரும் உளர். அவ்வுண்மை எடுத்துக் கூறப்பட வேண்டாத தொன்றாகவான்,அவர் உரை பொருந்தாமை அறிக. உலகு என்பது ஆகு பெயர். உலகத்து வாழும் உயிர்களுக்கு ஆயினமையால், உலகு என்றமையால், அதற்கு ஏற்ப அதன் பயனிலையை அமையாது என்றார்.யார் யார்க்கும்- யார்க்கும் யார்க்கும். யார்க்கும் யார்க்கும் என்று இரட்டித்து மொழிந்தமையால், இல்வாழ்வார்க்கும் துறந்தார்க்கும் என்று பொருள் உரைக்கப்பட்டது.

கருத்து. மழை இல்லையேல், ஒழுக்கமும் இல்லையாம்.

                       20.

மூன்றாம் அதிகாரம்-நீத்தார் பெருமை.

அஃதாவது, துறந்தாரது பெருமை.

க. ஒழுக்கத்து நீத்தார் பெருமை 
              விழுப்பத்து

வேண்டும் பலுவற் றுணிவு

'பொருள். ஒழுக்கத்து நீத்தார் பெருமை-துறவொழுக்கத்தில் நிற்கும் துறந்தாரது பெருமையை, பனுவல் துணிவு விழுப்பத்து வேண்டும் -நூல்களின் முடிவு சிறப்பாக விரும்பும்.

அகலம். தருமர் பாடம் ' துணிபு', துறவொழுக்கத்தில் நிற் கும்--துறவு நிலைக்குரிய ஒழுக்கங்களை விடாது பற்றி ஒழுகும், நிற்கும் என்பது அவாய்லீலையான் வந்தது.

கருத்து. ஒழுக்கத்தோடு கூடிய துறவிகளது பெருமையை நூல்கள் உயர்த்திக் கூறும். 21

உ. துறந்தார் பெருமை

துணைக்கூறின் வையத் திறத்தாரை யெண்ணிக்கொண் டற்று.

111