பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள். பொருள். துறந்தார் பெருமை துணை கூறின் -(இல் வாழ்க்கையை) நீத்தாரது பெருமைக்கு அளவு சொல்லின், வையத்து இறந்தாரை எண்ணிக் கொண்டு அற்று-(அஃது) உலகத்தில் இறந்தவர்களை எண்ணிக் கொண்டாற் போலும், . அகலம். இறந்தவர்களை எண்ணித் தொகை காண்டலும், துறந்தவர்களது பெருமைக்கு அளவு கூறலும் இயலா என்றபடி, கொண்டற்று என்பது வினையெச்சத் தொகை, அது கொண்டால் அற்று என விரியும். தாமத்தர் பாடம் " துணைக் கூறல்'. கருத்து. துறவிகள் பெருமைக்கு அளவு கூற முடியாது. 22,

௩. இருமை வகைதெரிந் தீண்டறம் 
                         பூண்டார்
     பெருமை பிறங்கிற் றுலகு. பொருள், இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார் பெருமை - இம்மை மறுமைகளின் கூறுபாட்டை அறிந்து இவ் வுலகின்கண் துறவறத்தைக் கைக்கொண்டவரது பெருமை, உலகு பிறங்கிற்று- உலகின் கண் (மற்றைய எல்லாவற்றினும்) உயர்ந்தது.

அகலம். இம்மை மறுமைகள்- இவ்வுலக வானுலக இன்பங்கள், இவற்றின் கூறுபாடு-இவற்றின் நிலையற்ற தன்மை, துறவு நிலையான பேரின்பத்தை நல்குவது.

கருத்து. துறவிகள் பெருமை உலகில் உயர்ந்தது, 

௪. உரனென்னும் தோட்டியா

           னோரைந்துங் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. பொருள், உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் - அறிவு என்னும் தொறட்டால் ஒப்பற்ற (பொறிகளாகிய) ஐந்து

112