பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்

என்றார்.அமையும்-போதும்.தருமர் பாடம்.'விசும்பிலார்.'தாமதத்தர் பாடம்.'ஆற்றற் கால்.'

   கருத்து.   துறவியின் வலிமை மிக மிகப் பெரிது.    

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்.

பொருள். செயற்கு அரிய செய்வார் பெரியர்- செய்தற்கு அரியனவற்றைச் செய்வார் பெரியர்; செயற்கு அரிய செய்கலாதார் சிறியர்--செய்தற்கு அரியனவற்றைச் செய்யமாட்டாதார் சிறியர்.

அகலம். செயற்கு அரியன;- உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை. 'யான்', 'எனது' விடுத்தல் முதலியன. 'செயற்குரிய செய்கலா தார்' என்று பாடம் ஓதுவாரும் உளர். கருத்து. செய்தற்கு அரியன செய்வார் பெரியர்.

7.சுவையொளி யூறோசை

நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே யுலகு.

பொருள். உலகு-உலகியல், சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் ஐந்தின் வகை தெரிவான் சுட்டே-சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் (இவ்)ஐந்தின் கூறுபாடுகளை அறிபவன் கண்ணதே.

அகலம். கூறுபாடு- தன்மை. மேற் கூறிய ஐம்புலன்களையும் முறையே இரசம்,ரூபம்,பரிசம்,சத்தம், கந்தம் என்பர் வடநூலார். கூறுபாடுகளாவன, நல்ல பயன்களை அளிக்கும் நல்ல புலன்களும், தீய பயன்களை அளிக்கும் தீய புலன்களுமாம். அறிதலாவது, அக் கூறுபாடுகளை அறிந்து மனத்தைத் தீயனவற்றிற் செலுத்தாது, நல்லனவற்றிற் செலுத்துதலாம். கட்டே என்பதற்குக் கட்டுதலே, அஃதாவது சிருட்டியே என்று உரைப்பினும் அமையும், என்று