பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்


சினத்தைக் கொள்ளுதல் துறவை இழத்தலாம். கணம்-நொடிப் பொழுது, குணமென்னும் குன்றேறி நின்றாரது வெகுளியால் சேரும் கேட்டை ஒரு கணமேனும் பிறர் தாங்குதல் அரிது என்று உரைப்பாரும் உளர்.

கருத்து. துறவிகள் ஒரு கணமேனும் வெகுளியைக் கொள்ளலாகாது.

                      29


அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான்.

பொருள். அந்தணர் என்போர் அறவோரே - அந்தணர் என்று சொல்லப்படுவோர் துறவறம் புரிபவரே, எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்-(அவர்) எவ்வுயிர்மாட்டும் தண்ணளி புரிந்து கடத்தலால்.

அகலம். பிரிநிலை ஏகாரம் செய்யுள் விகாரத்தால் கெட்டது . நச்சர் பாடம் ' அந்தண ரென்பர்', தண்ணனி-அருள்.

கருத்து. துறவிகளே மெய்யான அந்தணர். - 30.


இடைப் பாயிரம் முற்றிற்று.

116

116