பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்.

      அறப்பால். 
அஃதாவது, அறத்தின் பகுதி.
     
         பாயிரம். 

    பாயிரம்- முகவுரை

 முதல் அதிகாரம்-அறன் வலி யுறுத்தல். 

அஃதாவது, அறத்தினது வலிமையை வற்புறத்துதல்.

க. சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங் காக்க மெவனோ உயிர்க்கு.

பொருள். சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு, ஆக்கம் - வீட்டினைக் கொடுக்கும் செல்வத்தையும் கொடுக்கும் அறத்தின் மேற்பட்ட நல்வினை, உயிர்க்கு காவன்---மனித உயிர்க்கு யாது.' (ஒன்றும் இல்லை.)

அகலம்.'ஒகாரம்' அசை. ஆக்கம்- செல்வம். அஃது ஈண்டு ஆகுபெயர், அதனைத் தரும் நல் வினைக்கு ஆயினமையால் , இன்பத்தையும் புகழையும் தரும் செல்வத்தையும் தழுவி  நிற்ற லால், செல்வமும் என்பதன் உம்மை இருந்தது​ தழீஇய எச்சவும்மை, உம்மையைச் செல்வம் என்பதனோடு மாத்திரம் சேர்த்திருத்தலானும், ஈனும் என்னும் சொல்லைச் சிறப்பு என்பதனோடும் செல்வம் என்பதி னோடும் சேர்த்திருத்தலானும், மேற்கண்டவாறு பொருள்​ உரைத் தலே பொருத்தம். சிறப்பீனுஞ் செல்வமானது, ஞானம்.

கருத்து. 'இன்பமும் புகழும் தரும் செல்வத்தோடு வீட்டைத் தரும் செல்வத்தையும் அறம் கொடுக்கும்.

117

117