பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறன்வலி யுறுத்தல். பொருள் ; மனத்துக்கண் மாசு இலன் ஆவது அனைத்து(ம்) அறன் -உள்ளத்தின்கண் குற்றம் இல்லாதவனாய்ச் செய்யப்படுவது அனைத்தும் அறமாம்: பிற ஆகுல நீர-மனத்துக்கண் குற்றமுள்ளவனாய்ச் செய்யப்படுவன துன்பம் தருவன (வாகிய மற்றங்களாம்) அகலம், அனைத்தும் என்பதன் முற்றும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. தாமத்தர் பாடம் ' நீர்மை', மற்றை உரையாசியர்கள் நால்வர் பாடம் ' மனத்துக்கண் மாசிலன் ஆதல அனைத்தறன் அதற்கு அவர்களுரை, (அறஞ் செய்வான் என் மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆகுக அவ்வளவே அறம். (ஒருவன் தன்) மனத்தின்கண் குற்றமுடையன் அல்லன் ஆயின் ஓர் ஒழுக்கம் ஆருமே யன்றி அற மாகாது, என்னை? அறம் என்பது ஓர் உயிர்க்கு நன்மை பயக்கும் ஒரு செயல், இதுபற்றியே, ஆசிரியர் "அறவினை யோவாதே செல்லும் வாயெல்லாஞ் செயல், " " அன்றறிவா மென்னா தாறஞ் செய்க", "வீழ்நாள் படாஅமை நன்று ஆற்றின்" செயற்பால தோரும் அறனே " என்று கூறியுள்ளார். அன்றியும், மனத்தின்கண் மாசில னாதலே அறம் என்று கூறின், பற்றுள்ள முடையார் ஈகை முதலிய செயல்களைச் செய்யாது விடுதற்கு அக்கூற்றை ஒரு மேற்கோளாக எடுத்துக் காட்ட முற்படுவர். நன்று புரியாமைக்கு மேற்கோளாக எடுத்துக் காட்ட உதவும் ஒரு வகை மனோ நிலையை அறம் என்று ஆசிரியர் கூறார். ஆதலான், மாசில னாதல் அனைத்தறன்' என்பது ஏடு பெயர் தெழுதியோனால், அல்லது கால அளவில் சிதைந்து போய்ப் பின்னர் ஊகித்து எழுதப் பட்ட வற்றால் சேர்ந்த பிழை எனச் கொள்க. கருத்து : குற்றம் அற்ற மனத்தோடு செய்யப்பட்ட வினைகலெல்லாம் அறமாம்.

. அழுக்கா அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

 இழுக்கா இயன்ற தறம்.