பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உரைப்பாயிரம்.

பாக்களைப் போலச் சொற் செறிவும் பொருட் செறிவும் உடையன அல்ல. {2) இப் பாக்களிற் பலவற்றின் பொருள்கள் பல தடைகளுக்கு இடம் கொடுக்கின்றன. {3) "மெய்யுணர்தல்", "துறவு" என்னும் அதிகாரங்கள் நூலின்கண் இருக்கின்றமையால், "கடவுள் வாழ்த்து", "நீத்தார் பெருமை" என்னும் அதிகாரங்களைப் பாயிரத்தில் கூற வேண்டுவ தில்லை. (4) "மெய்யுணர்த"லில் கடவுளுக்குக் கூறியுள்ள இலக்கணங்களையும், "கடவுள் வாழ்த்"தில் கடவுளுக்குக் கூறியுள்ள இலக்கணங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டு அதிகாரங்களையும் இயற்றியவர் ஒருவரல்ல ரென்பது நன்றாக விளங்கும். அவ்வாறே, "துற"வின் பாக்களையும், "நீத்தார் பெருமை"யின் பாக்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அவ் விரண்டு அதிகாரங்களையும் இயற்றியவர் ஒருவ ரல்ல ரென்பது நன்றாக விளங்கும். ‘மழையைச் "சிறப்பிற் றணிப்பாரு மில்லை, வறப்பிற் றருவாருமில்"லாகையால் "வான் சிறப்" பைக் கூறுதலால் பயன் ஒன்றும் இல்லை.

ஆயினும், நம்மவர்களிற் பலர் அம் மூன்று அதிகாரங்களும் திருவள்ளுவராலே இயற்றப் பட்டவை என்று கருதி வருகின்றமையால், அவர் மனம் நோகும்படியாக அம் மூன்று அதிகாரங்களையும் திருக்குறளிலிருந்து நீக்கி விட யான் விரும்பாதவனாய், அவை இடைக் காலத்தில் வந்து சேர்ந்த பாயிர மென்று யாவரும் தெரிந்து கொள்ளும் பொருட்டு, அவற்றிற்கு "இடைப் பாயிரம்" என்னும் தலைப்பெயர் கொடுத்து, அவற்றை எனது உரையுடன் திருக்

3