பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள்—அறப்பால்.

பொருள். அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும் இழுக்கா இயன்றது-பொறாமை ஆசை பெகுளி இன்னாச் சொல்(இந்) நான்கையும் நீக்கிச் செய்யப் பெற்ற வினை, அறம்-அறமாம்.

அகலம். வெகுளி-கோபம், இன்னாச் சொல்- துன்பந் தருஞ் சொல். 'இழுக்கா' என்பது 'செய்யா' என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம். இயன்றது-யிகழ்ந்தது-செய்யப்பட்ட வினை. இழுக்கி-நீக்கி.

கருத்து. இந் நான்கு குற்றங்களோடு சேராத வினை அறமாம்.

௬. அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
            பொன்றுங்காற் பொன்றாத் துணை.

பொருள். அன்று அறிவாம் என்னாது அறம் செய்க-இறக்கும் ஞான்று செய்வாம் என்று கருதாது (இற்றை ஞான்றே ஒவ்வொருவரும்) நல் வினையைச் செய்க; பொன்றுங்கால் அது பொன்றா (த்) துணை-(அவர்) இறக்குங்காலத்தில் அஃது இறவாமல் (அவருயிருடன் செல்லும்) துணையாம்.

அகலம். 'பொன்றுங்கால்' என்று பின்னர்க் கூறியிருத்தலான், அன்று என்பபதற்கு இறக்கும் ஞான்று என்று பொருள் உரைக்கப்பட்டது. ஞான்று-நாள். அறிதல் என்பது ஈண்டுச் செய்தல் என்னும் பொருட்டாதற் போல. 'மற்று' அசை. "தாஞ்செய் வினையல்லாற் றம்மொடு செல்வதுமற், றியாங்கணுந் தேரிற் பிறிதில்லை-யாக்குத்தாம், போற்றிப் புனைந்த வுடம்பும் பயமின்றே கூற்றங்கொண் டோடும் பொழுது."-நாலடியார்

120