பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்

வும், பிழைபட்ட மூல பாடங்கள் சிலவற்றைக் கொண்டனவாகவும், சில குறள்களுக்கு நுண்ணிய அறிவுடையார் ஏற்றுக் கொள்ள இயையாத பொருள்களை உரைப்பனவாகவும் காணப்படுகின்றன. அவை பற்றி, திருக்குறளை நேரிய பொருளோடும் பிழைகள் இன்றியும் தமிழ் மக்கள் எளிதில் கற்கும்படியாக அதற்கு ஓர் உரை இயற்றப் பல ஆண்டுகளுக்கு முன் நினைத்தேன்; சில ஆண்டுகளுக்கு முன் இயற்றி முடித்துத் திருச்செந்தூர் திரு முருகப் பெருமான் சந்நிதியில் அரங்கேற்றினேன்; இப்பொழுது அச்சிட்டு வெளியிடுகின்றேன்.

பரிமேலழகருரை அச்சுப் புத்தகத்தின் இல்லறவியலுள் காணப்படுகின்ற 'வெஃகாமை’, 'பயனில சொல்லாமை’ என்னும் இரண்டு அதிகாரங்களையும் துறவற வியலுள் சேர்த்தும், துறவற வியலுள் காணப்படுகின்ற 'வாய்மை’, 'கள்ளாமை’ என்னும் இரண்டு அதிகாரங்களையும் இல்லற வியலுள் சேர்த்தும் இருக்கிறேன். வாய்மையும், கள்ளாமையும் இல் வாழ்வார்க்கும் இன்றி யமையாதன வாகலானும், வெஃகாமையும் பயனில சொல்லாமையும் இல் வாழ்வார் கைக் கொள்வதற்கு அரியன வாகலானும், அவை துறவிகள் கைக் கொள்வதற்கு உரியன வாகலானும், முன்னிரண்டு அதிகாரங்களின் பாக்களிற் சில இல்வாழ்வாரைக் குறித்தும் பின்னிரண்டு அதிகாரங்களின் பாக்களிற் சில துறவிகளைக் குறித்தும் பாடப்பட்டிருக்கின்றமையானும் அவ்வாறு செய்தேன். இஃதன்றியும், நேரிய பொருள் கோடலுக்கு இடையூறாக வரிசை யொழுங்கு

6