பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உரைப்பாயிரம்.

தவறிக் கிடந்த சிற்சில குறள்களின் வரிசையை ஒழுங்கு படுத்தியுள்ளேன்.

வீடு இல் வாழ்வார், துறந்தார் ஆகிய இரு திறத்தார்க்கும் உரிய தாகலானும், அறத்துப் பாலில் 'வீட்டியல்’ என ஓர் இயல் உண்டென்று யான் கேட்டிருக்கின்றமையானும், 'நிலையாமை’ முதலிய நான்கு அதிகாரங்களும் வீட்டியலிற் குரியனவாகலானும், அவற்றை "வீட்டியல்" என்று ஓர் இயலாக அமைத்துள்ளேன். முந்திய உரைகளிற் காணும் அதிகாரங்கள் சிலவற்றின் தலைப் பெயர்களிலும், குறள்கள் சிலவற்றின் மூல பாடங்களிலும் சிற் சில எழுத்துக்களும் சொற்களும் ஏடு பெயர்த் தெழுதியோர்களால் நேர்ந்த பிழைகள் என யான் கருதுகின்றமையால், அவற்றைத் திருத்தியுள்ளேன். முந்திய உரையேடுகளிற் காணப்படும் பாடங்களையும், அவற்றை யான் திருத்தியதற்குரிய காரணங்களையும் அவ்வவ் இடங்களில் குறித்துள்ளேன். மற்றைப்படி, பரிமேலழகர் உரைப் புத்தகப்படியே அதிகார வரிசையையும், குறள் வரிசையையும் அமைத்துள்ளேன்.

"ஓரா தெழுதினே னாயினு மொண்பொருளை, ஆராய்ந்து கொள்க வறிவுடையார் - சீராய்ந்து, குற்றங் களைந்து குறை பெய்து வாசித்தல், கற்றறிந்த மாந்தர் கடன்" என்பதும், "அருந்ததிக் கற்பினாள் தோளும் திருந்திய, தொல்குடியில் மாண்டார் தொடர்ச்சியும் - நூலின், அரிலகற்றுங் கேள்வியார் நட்புமிம் மூன்றும், திரிகடுகம் போலு மருந்து" என்பதும், முந்திய உரையாசிரியர்கள் சில குறள்களில் வேறு வேறு

7