பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப் பாயிரம்.


வாக்குத் திருக்குறளாகிய வேதத்தைச் சொல்லி வள்ளுவன் வாயின் கண்ணதாயிற்று.

தன் கணவனாகலின் நான்முகன் நாவிலிருந்தென்றும், அவன் அவதாரமாகலின், வள்ளுவன் வாயதென் வாக்கென்றும் கூறினாள், பாரதம் வியாசரைக் கொண்டு சொல்லப்பட்டது. இதனால் நான்மறை பூர்வ வேதமும், பாரதம் மத்திய வேதமும், திருக்குறள் உத்தர வேதமும் என்ற தாயிற்று, வேதம் மூவகைத் தென்பதூஉம், இவற்றது தோற்றமுறையால் இஃது வாக்கியப் பிரமாணத்திற் சிறப்புடைத் தென்பதூஉம் சொல்லியபடி. (உ)

இறையனார்.

என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினும்
நின்றலர்ந்து தேன்பிலிற்று நீர்மையதாய்க்-குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் றெய்வத் திருமலர்போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்,

இ-ள், மன்புலவன் வள்ளுவன் வாய்ச்சொல்-புலவர்க்கு அரசனாகிய வள்ளுவன் வாயிற் பிறந்த திருக்குறளானது, என்றும் யாணர் புலராது நாட்செல்லுகினும் நின்று அலர்ந்து தேன் பிலிற்றும் நீர்மையதாய்-எக்காலத்துந் தன்னழகு கெடாது நெடுங்காலங் கழியினும் நிலைபெற்று மலர்ந்து தேனைச் சொரிகின்ற குணமுடையதாய் விளங்குமாதலால், குன்றாத செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம்-குறைவுபடாத செய்ய தளிர்களையுடைய கற்பகத்தினது தெய்வத்தன்மை பொருந்திய உயர்வாகிய மலர் போலும்.

திருக்குறளுக்கு, அழகு சொன்முடிபு பொருண் முடிபின் குணங்களும், அலர்தல் எங்கும் பரவுதலும், தேன் பிலிற்றல் இருமை யின்பங்களும் விளைத்தலுமாம். 'சொல்' ஆகு பெயர், இறையனார்

11