பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்

கடவுளாகலின், இனி இதிற் சிறப்பதொன் றுளதாவது இன்றென்னுந் துணிவு தோன்ற என்று மென்றும், பின்னும் அதனை வலியுறுத்தற்கு நாட் செல்லுகினு நின்றென்றும், வாழ்த்துப் பொருள்பட இவ்வாறு கூறினார். இது அழியாது நின்று பெருகிப் பயன்படுமாறு சொல்லிய படி.. வ உ. சி. பாடம் ‘ 'நீர்மைய தாம்'. (௩) 115)

உக்கிரப் பெருவழுதியார்.

நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
றான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த- நூன்முறையை
வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்னெஞ்சஞ்
சிந்திக்க கேட்க செவி.

இ-ள். நான் முகத்தோன் தான் மறைந்து வள்ளுவனாய் நான்மறையின் மெய்ப்பொருளை முப் பொருளாத் தந்து உரைத்த நூன்முறையை - நான் முகன் தான் தன்னுரு மறைந்து திருவள்ளுவனாய் அவதரித்து நான்கு வேதங்களி னுண்மைப் பொருளை அறம் பொருள் இன்ப மென்னும் முப்பாற் பொருளாகத் தமிழில் தந்து கூறிய திருக்குற ளெழுதிய திருமுறையை, சென்னி வந்திக்க- என் தலை வணங்குக, வாய் வாழ்த்துக-வாய் துதிக்க, நன்னெஞ்சம் சிந்திக்க - நல்ல மனம் தியானிக்க, செவி கேட்க - காது கேட்க.

'முப்பொருள்' ஆகுபெயர். இவ் வேதப் பொருள் ஆதியிலே வேதஞ் சொல்லியோனாலேயே சொல்லப்பட்டமையால், உலகத்துச் சமயாசிரியர்களாலும் பிறராலும் ஒன்றற்கொன்று மாறாகக் கொள்ளப் பட்ட பொருள்கள்போல்வ தன்றென்பது தோன்ற மெய்ப்பொருளென்றார். "கலையுணர் புலமையிற் றலைமையோ னாகி, விதிமுறை வழாது முதுநிலம் புரக்கும், பெருந்தகை உக்கிரப் பெருவழுதியென்னும், தன்னிகரில்லா மன்னவர் பெருமான், தான் மேற் கொண்ட

சிறப்பைப் பலரும், அறிந்துமேற் கொள்ளவிவ் வாறு வழிபாடு.

12