பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நக்கீரர்.

தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளால்
ஆனா வறமுதலா வந்நான்கு - மேனோருக்
கூழி னுரைத்தாற்கு மொண்ணீர் முகிலுக்கும்
வாழியுல கென்னாற்று மற்று.

இ-ள். தானே முழுது உணர்ந்து - தானே வேதப் பொருளனைத்தையும் அறிந்து, தண் தமிழின் வெண்குறளால் ஆனா அறம் முதலா அந்நான்கும் ஏனோருக்கு ஊழின் உரைத்தாற்கும் - தண்ணிய தமிழின்கண் குறள் வெண்பாக்களால் விட்டு நீக்குதல் கூடாத அற முதலாகிய அந் நான்கு பொருள்களையும் அவற்றை அறியாதவர்களுக்கு அவர்எளிதி னறிய முறையாற் சொல்லியருளிய திருவள்ளுவருக்கும், ஒண்ணீர் முகிலுக்கும் - ஒள்ளிய நீரைத் தந்த மேகத்துக்கும், உலகு மற்று என் ஆற்றும் - இவ்வுலகம் எதிர் நன்றி யாது செய்யும்? செயக் கிடந்தது ஒன்றும் இல்லை; வாழி - அவரும் அதுவும் வாழ்க.

ஆனாமை - நீங்காமை. தானே முழுதுணர்ந் தெனவே, ஆசாரியராயிருந்து பிறர் அறிவிக்க அறிந்திலரென்றதாயிற்று. முழுதுமென்னு மும்மை தொக்கது. 'ஒண்மை' இனிமை மேனின்றது. முறை - நூலின் முப் பொருள்களின் கிடக்கை யொழுங்கு. நாயனார் கொடைச் சிறப்புச் சொல்லியபடி. (எ)

மாமூலனார்.

அறம்பொரு ளின்பம் வீடென்னுமந் நான்கின்
திறந்தெரிந்து செப்பிய தேவை-மறந்தேயும்
வள்ளுவ னென்பானோர் பேதை யவன்வாய்ச்சொற்
கொள்ளா ரறிவுடை யார்.

15