பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்

இ-ள். அறம் பொருள் இன்பம் வீடு என்னும் அந் நான்கின் திறம் தெரிந்து செப்பிய தேவை - அற முதலாகச் சொல்லப்பட்ட அவ் வேதப் பொருள்களாகிய நான்கனது கூறுபாட்டையும் தெரிந்து உலகத்தார்க்குச் சொல்லிய தேவனை, மறந்தேயும் வள்ளுவன் என்பான் ஓர் பேதை-மறந்தாயினும் ஒரு மனிதனாக உட்கொண்டு வள்ளுவனென்று சொல்லுதற்கு ஒருவன் உளனாயின், அவன் ஓர் அறிவில்லாதவனாவன்; அவன் வாய்ச்சொல் அறிவு உடையார் கொள்ளார்-அவனது வாயிற் பிறந்த அச் சொல்லை அறிவுடையார் கொள்ளார். - அற முதலியவற்றின் கூறுபாடு - அவற்றினது தொகை வகை விரிகள். மறந்தேயுமென்றதனால், நினைப்புடன் சொல்லுவோன் பேதையிற் பேதையா மென்ற தாயிற்று. முன்னும் பின்னுமுள்ள பாட்டுக்களில் இப் பெயர் தெய்வத்தன்மையைக் குறிப்பிக்கும்படி நன்குமதித்து உயர்த்திச் சொல்லப்படுதலால், ஒரு மனிதனாக வுட்கொண்டென்பது வருவிக்கப்பட்டது; அன்றி ஒலிக் குறிப்பினாலே சாதி யிழிவு தோன்ற வள்ளுவ னென்பானெனினும் அமையும். இக்குறிப்பொலியை வட நூலார் காகுசுர மென்பர். தெய்வப் புலவரை அவமதிப்பி னிழிவு சொல்லியபடி. (அ)

கல்லாடர்.

ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின்
அன்றென்ப வாறு சமயத்தார்- நன்றென
எப்பா லவரு மியைபவே வள்ளுவனார்
முப்பான் மொழிந்த மொழி.

இ-ள், ஆறு சமயத்தார் ஒன்றே பொருள் எனின் வேறு என்ப - அறுவகை மதத்தோரும் ஒரு மதத்தார் தமது நூலிலே உலகமும் உயிரும் கடவுளுமாகிய பொருள்கள் ஒன்றே யென்று நாட்டுவ

16