பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்

நதி வைகைநதி எனப்படுகின்ற மூன்று நதிகளையும், முப் பதியும் - கருவூர் உறையூர் மதுரை எனப்படுகின்ற மூன்று பதிகளையும், மும் முரசும் - மங்கலமுரசு வெற்றிமுரசு கொடை முரசு எனப்படுகின்ற மூன்று முரசுகளையும், முத் தமிழும் - இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் எனப்படுகின்ற மூன்று தமிழ்களையும், முக் கொடியும் - விற்கொடி புலிக்கொடி மீனக்கொடி எனப் படுகின்ற மூன்று கொடிகளையும், மும் மாவும் - கனவட்டம் பாடலம் கோரம் எனப் படுகின்ற மூன்று குதிரைகளையும், தாம் உடைய மன்னர் தட முடிமேல் தார் அன்றோ - தாம் முறையேயுடைய சேர சோழ பாண்டியர் எனப்படுகின்ற மூவரசருடைய பெரிய முடிகளின் மேலுங் கொள்ளப்பட்ட மாலையன்றோ.

அன்றோ வென்பது பல ரறி தேற்றம். 'முப்பால்' ஆகு பெயர். மும் முரசும் முத் தமிழும் அம் மூவரசர்க்கும் பொதுமைய வாயினும், இம் முறை யுரிமை அவர் குடி மரபிற்கு இயைந்தன போலும். அரசர் மூவரும் மேற்கொண்ட சிறப்புச் சொல்லியபடி. (௰)

மருத்துவன் தாமோதரனார்.

சீந்திநீர்க் கண்டந் தெறிசுக்குத் தேனளாய்
மோந்தபின் யார்க்குந் தலைக்குத்தில் - காந்தி
மலைக்குத்து மால்யானை வள்ளுவர்முப் பாலாற்
றலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு.

இ-ள். காந்தி மலைக் குத்தும் மால் யானை - தன் பகையென வெகுண்டு மலையைக் குத்துகின்ற பெரிய களிறு போலுள்ள அரசனே, சீந்திநீர்க் கண்டம் தெறிசுக்குத் தேன் அளாய் மோந்தபின் யார்க்கும் தலைக்குத்து இல் - சீந்திநீர்ச் சருக்கரையையும் சிதைக்கப்பட்ட சுக்கையும் தேனொடு கலந்து மோந்து பின் அதனால் தலைக்குத்

18