பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப் பாயிரம்.

துடையோர் யாவர்க்கும் தலைக்குத்து இல்லையாகும். வள்ளுவர் முப்பாலால் சாத்தற்குத் தலைக்குத்துத் தீர்வு - திருவள்ளுவர் அருளிச் செய்த முப்பாலினாலே சீத்தலைச் சாத்தனார்க்குத் தலைக்குத்து இல்லையாயிற்று.

யானை போல்பவனை யானை யெனலால், ஆகு பெயர். முன் கேட்கப்பட்ட நூல்களி லெல்லாம் பல சொற்குற்றங்களும், பொருட்குற்றங்களும், கண்டு பொறாது தலையில் அறைந்து கொண்டு வந்தமையால், புண் பட்டுக் குத்தல் உண்டாயிருந்தது; இதன்கண் ஓர் குற்றமுங் காணப் பெறாமையால் அது நீங்கிற்றென்க. எப்படி அம்மூன்று சரக்கும் அதற்கு மருந்தாமோ அப்படியே இதற்கு இம் மூன்று பாலும் மருந்தாயின வென்பதாம். தீர் வென்னுந் தொழிற் பெயர் முற்றுப் பொருளில் வந்தது. இதன் குற்றமற்று விளங்குகை சொல்லியபடி. (௰க)

நாகன் றேவனார்.

தாளார் மலர்ப்பொய்கை தாங்குடைவார் தண்ணீரை
வேளா தொழிதல் வியப்பன்று--வாளாதா
மப்பா லொருபாவை யாய்பவோ வள்ளுவனார்
முப்பான் மொழிமூழ்கு வார்.

இ-ள். தாள் ஆர் மலர்ப் பொய்கை குடைவார் தண்ணீரை வேளா தொழிதல் வியப்பு அன்று- நாளத்தோடு பொருந்திய தாமரை மலர்களை யுடைய ஒரு குளத்து நீரின்கண்ணே மூழ்குவோர் வேறு தண்ணீரை விரும்பா தொழிதல் வியப்பைச் செய்வதன்று; வள்ளுவனார் முப்பால் மொழி மூழ்குவார் தாம் வாளா அப்பால் ஒரு பாவை ஆய்பவோ- திருவள்ளுவரது முப்பால்களையுடைய நூலின் கண்ணே மூழ்குவார் தாம் வீணாக அப்பால் ஒரு நூலை விரும்புவரோ?

19