பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப் பாயிரம்.

திறந்தொறுஞ் சேரச் சுருங்கிய சொல்லால் பொருள் விளங்க விரித்துச் சொல்லுதல் வல்லார் - அது அது தனது தனது வகையோடு சேரும் படி சுருங்கிய சொல்லால் பொருள் விளங்க விரியும்படி வைத்துச் சொல்லுதல் வல்லார், வள்ளுவரல்லால் ஆர் - வள்ளுவ ரல்லது ஒருவருமில்லை.

'பார்' ஆகு பெயர். திறம்- அறம் முதலியவற்றின் கூறுபாடு. சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் முதலிய அழகுகள் எப்படி இவரால் அமைக்கப்பட்டனவோ அப்படிப் பிறரால் அமைக்கப்படுதல் கூடாமை காட்டியதாயிற்று. நூலுக்கும் நாயனார்க்கும் தகுதி சொல்லியபடி, (௰௩)

பொன் முடியார்.

கானின்ற கொங்கலாய் காசிபனார் தந்ததுமுன்
கூநின் றளந்த குறளென்ப - நூன்முறையான்
வானின்று மண்ணின் றளந்ததே வள்ளுவனார்
காநின் றளந்த குறள்.

இ-ள். கான் நின்ற தொங்கலாய்- மணந் தங்கப் பெற்ற மாலையையுடைய பாண்டிய ராசனே, முன் காசிபனார் தந்தது கூநின்று அளந்த குறள் என்ப - முன் காசிபராலே தரப்பட்ட குறளை மண்ணின் கண்ணே நின்று உலகத்தை அளந்த குறளென்று சொல்லுவர்; தாம் நின்று வள்ளுவனார் அளந்த குறள் நூன் முறையான் வான் நின்று மண் நின்று அளந்தது- தாம் இங்கே எழுந்தருளித் திருவள்ளுவராலே தரப்பட்ட குறள் நூலின் முறையோடு கூடி விண்ணின் கண்ணே நின்றும் மண்ணின் கண்ணே நின்றும் உலகத்தை அளந்தது.

'கு' 'கூ' என நீண்டது. ஆ னுருபு ஒடு வுருபின் பொருளில் வந்தது. அக் குறள் வஞ்சித்துப் பெற் றளத்தலால் நூன்முறையோடு கூடாததாயிற்று. இக்குறளுக்கு ஒலி வடிவும் வரி

21