பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்

வடிவு மென இரண்டு வடி வுண்மையால், ஒலி வடிவுக் கிடம் வானாகலின் வானின் றென்றும் , வரி வடிவக் கிடம் மண்ணாகலின் மண்ணின்றென்றும் கூறினார். இக்குறளுக்கு நூன் முறையோடு கூடலும் வானிற்றலும் மிகுத்துச் சொல்லி வேற்றுமை செய்யப்பட்டது. முன் '"மாலு மென்பாட்டிலே நாயனார்க்கும் மாலுக்கும், இப்பாட்டிலே திருக்குறளுக்கும் மாலவதாரக் குறளுக்கும் ஒப்புமை குறித்துச் சொல்லலால் வேறுபாடாம். உலகத்துப் பொருளெல்லாம் இஃது அளத்தற் சிறப்புச் சொல்லியபடி. (௰௪)

கோதமனார்.

ஆற்ற லழியுமென் றந்தணர்க ணான்மறையைப்
போற்றியுரைத் தேட்டின் புறத்தெழுதா-ரேட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினு மாற்றல்சோர் வின்று.

இ-ள். அந்தணர்கள் நான் மறையை உரைத்துப் போற்றி ஆற்றல் அழியும் என்று ஏட்டின் புறத்து எழுதார் - அந்தணர்கள் நான்கு வேதங்களையும் வாய்ப் பாடமாகக் காப்பாற்றி, ஏட்டின்கண் எழுதிவைத்தால் வலியில்லாரும் ஓதுவராகலின் இவற்றின் வலிமை குறையுமென்று ஏட்டின்கண் எழுதார்; வள்ளுவனார் முப்பாலை ஏட்டு எழுதி வல்லுநரும் வல்லாரும் சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று - திருவள்ளுவரது திருக்குறளை ஏட்டின்கண் எழுதிவைத்து வலியுடையவரும் வலியில்லாரும் ஓதினாலும், வலிமை குறைதலில்லை.

அவ்வேதத்துக்கு உதாத்தம் அநுதாத்தம் சுவரித மென்னுஞ் சுரங்களின் வழுவாமல் ஓதல் வேண்டுமென்னும் விதியுளதாகலின், அதற்குத் தகுதியுடைய அந்தணரே அதிகாரிகளாயினர்; இதற்கு அஃதில்லாமையால், யாவரும் அதிகாரிக ளாவ ரென்றறிக. சொல்லி

22