பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப் பாயிரம்.

டினு மென்றதனால் பொருளுணர்ச்சிக்கு இதற்கும் வலிமை வேண்டுமென்பது பெறப்பட்டது. (௰௪)

ஆற்றல் - சொற் செறிவின் றிட்பம். இங்ஙனங் கூறவே, அவ்வேதம் சொல்லின் கண்ணே தலைமை யுடைத்தென்பதூஉம், இவ்வேதம் பொருளின்கண்ணே தலைமையுடைத் தென்பதூஉம் பெறப்பட்டன. ஓதப் படுதலின் அவ்வேதத்தினும் இது சிறப்புடைமை சொல்லியபடி, (௰௫)

நத்தத்தனார்.

ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும்
பாயிரத்தி னோடு பகர்ந்ததற்பின்- போயொருத்தர்
வாய்க்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ
ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்.

இ-ள் . பாயிரத்தினோடு ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும் பகர்ந்ததற்பின் போய் ஒருத்தர் வாய்க் கேட்க நூல் உளவோ-பாயிர நான்கதிகாரங்களோடு சேர்ந்து தொகையாகிய அரிய ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள் வெண்பாக்களையும் ஓதியுணர்ந்த பின்பு, போய் ஒருவரது வாயாலே கேட்டறிதற்கு நூலுளவோ? இல்லை மன்னு தமிழ்ப் புலவராய்க் கேட்க வீற்றிருக்கலாம் --நிலை பெற்ற தமிழிலே புலமை நிரம்பியோராகிப் பிறர் தம்மிடத்து வந்து கேட்க வீற்றிருக்கலாம்.

வீற்றிருத்தல் ஒரு சபை நடுவிலே உயர்வாகிய ஆதனத்தில் ஏறியிருத்தல். இவற்றுட் பலவகைப்பட்ட நூல்களின் கருத்துக்களெல்லாம் விளங்கி நிற்றலின், கேட்க நூலுளவோ வென்றார். புலவராயெனவே, புலமை நிரம்புதற்கு இவை ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள்களும் போதுமென்பது பெறப்பட்டது. ஓதி யோர்க்கு வரும் இம்மைப் பயன் சொல்லியபடி. (௰௬)

23