பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்

வெண்பாக்களாலே தாம் மாட்சிபெற்ற பாடற்றொழிலினாலே மூன்று பால்களிலே அறம் முதலிய நான்கு பகுதிப் பொருளையும் திருவாய் மலர்ந்தவர், தெய்வத் திருவள்ளுவர் - தெய்வத்தன்மையையுடைய திருவள்ளுவ நாயனார்.

கூர் - சிறப்பு. நான்கனுண் மூன் றடங்குவ தன்றி மூன்றனுள் நான் கடங்காமையின், வியந்து கூறப்பட்ட தாயிற்று. நூல் செய்த சிறப்பும், அதனால் அரசனை மகிழ்வித்தமையும் சொல்லியபடி. (௰௯)

சிறு மேதாவியார்.

வீடொன்று பாயிர நான்கு விளங்கற
நாடிய முப்பத்து மூன்றொன்றூழ்-கூடுபொரு
ளெள்ளி லெழுப திருபதிற் றைந்தின்பம்
வள்ளுவர் சொன்ன வகை.

இ-ள். வள்ளுவர் சொன்ன வகை - திருவள்ளுவராலே சொல்லப்பட்ட திருக்குறளின் அதிசார வகை, பாயிரம் நான்கு-பாயிரம் நான் கதிகாரத்தை யுடைத்து; அறம் முப்பத்து மூன்று-அறம் முப்பத்து மூன் றதிகாரத்தை யுடைத்து; ஊழ் ஒன்று - ஊழ் ஒரதிகாரத்தை யுடைத்து; பொருள் எழுபது - பொருள் எழுப்ததிகாரத்தை யுடைத்து; இன்பம் இருபதிற் றைந்து - காமம் இருபத்தைந் ததிகாரத்தை யுடைத்து.

அறத்துப்பாலு ளடங்காது அதனை விட்டு நூற்கெல்லாம் பொதுவாய் நிற்றலின் வீடொன்று பாயிர மென்றும், இம்மை மறுமை வீடு மூன்றும் பயத்தற் சிறப்பிற்றாய் மூன்றனுண் முதனிற்றலின் விளங்கற மென்றும், யாவர்க்கும் பொதுப்பட நாடித் தொகுக்கப் பட்ட அறத்தின் கூறுபாடு இவையே யாகலின் நாடிய முப்பத்து மூன் றென்றும், முன்னின்ற அறமும் பின்னின்ற இன்பமும் கைகூடுதற்குத் துணையாய் நிற்றலின் கூடு பொரு ளென்றும், அப்

26