பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப் பாயிரம்.

பொருளின் பாகு பாடுக ளெல்லாம் இவற்றி லடங்குதலின் எள்ளிலெழுப தென்றும் கூறினார்.

எள்ளல் - இகழ்தல். சில பழைய நூல்களிலே சிலவற்றைச் சாதியாரும் சமயத்தாரும் மிகுத்தும் குறைத்தும் வேறு படுத்தலால் அப்படிப்பட்ட வேறுபாடு இதற்கும் வரினும் வருமென்று ஆசங்கித்து, இத னதிகாரங்களுக்கு இங்ஙனந் தொகை செய்தார். பின் இவ்வாறு தொகை செய்யப்பட்டு வருவனவற்றிற்கும் இதுவே கருத்தாகக் கொள்க. முப்பால்களுக்கும் அதிகாரத் தொகை சொல்லிய படி. (௨௰)

நல்கூர் வேள்வியார்.

உப்பக்க நோக்கி யுபகேசி தோண்மணந்தா
னுத்தர மாமதுரைக் கச்சென்ப - விப்பக்க
மாதானு பங்கி மறுவிற் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு.

இ-ள். உப் பக்கம் நோக்கி உபகேசி தோள் மணந்தான் உத்தர மா மதுரைக்கு அச்சு என்ப - அப் பக்கத்தைக் குறித்துச் சென்றோனாகிய உமா தேவியினது தோளை மணந்த கடவுளை வடமதுரைக்கு ஆதார மென்று சொல்லுவர்; இப் பக்கம் மாதானுபங்கி மறுவில் புலச் செந்நாப் போதார் புனற் கூடற்கு அச்சு - இப் பக்கம் மாதானுபங்கி யெனப்படுகின்ற குற்றமற்ற புலமையாகிய தேனைச் சொரிகின்ற செவ்விய நாவாகிய மலரை யுடையவர் நீர் வளத்தையுடைய தென் மதுரைக்கு ஆதார மாவர்.

உப் பக்கம் இடைக்காடர் அரசன் தன் பாடலை அவமதித்தமை பற்றிப் பிணங்கிச் சென்ற பக்கம். உப் பக்க நோக்கி யென்றது வினையாலணையும் பெயர், கேசி திருமால்; இது அக் கடவுள் சகசிர{{rh||27}