பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப் பாயிரம்.

திற மென்றது அறம் முதலியவற்றோடுங் கூட்டப்பட்டது. நாவலரே யென்றமையால், பிறரால் அறியப்படுவ தன் றென்றதாயிற்று. முப்பா லியற் றொகையும், இவற்றி னடங்காதது ஒன்றில்லை யென்பதும் சொல்லியபடி. (௨௰௨)

வெள்ளி வீதியார்.

செய்யா மொழிக்குத் திருவள் ளுவர்மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே- செய்யா
வதற்குரிய ரந்தணரே யாராயி னேனை
யிதற்குரிய ரல்லாதா ரில்.

இ-ள். செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே-ஒருவராலே செய்யப்படாத மொழியாகிய வேதத்துக்கும் திருவள்ளுவரால் அருளிச் செய்யப்பட்டதன் வழியி னொழுகுவோர்க்குப் பயன் விளைவிலே பொய்படாத மொழியாகிய திருக்குறளுக்கும் பொருளொன்றே; ஆராயிற் செய்யா அதற்கு உரியர் அந்தணரே - ஆராயுங்கால், செய்யப்படாத அவ் வேதம் ஓதுதற் குரியவர் அந்தணரே; ஏனை யிதற்கு உரியர் அல்லாதார் இல் - பொய்படாத இத் திருக்குறள் ஓதுதற்கு உரியவ ரல்லாதவர் உலகத்திலில்லை.

பூர்வ வேதத்தை நித்திய மென்பார் மதம் பற்றிச் செய்யா மொழி யென்றார். அது வட மொழியும் இது தென் மொழியுமாய் நின்று சில வேறுபா டுடையன போல் தோன்றினும் நுண்ணுணர்வா னோக்குவார்க்குக் கருத்து வேறுபடாமையின், பொருளொன்றேயெனத் தேற்றேகாரம் கொடுத்துக் கூறினார். 'செய்யா மொழி', 'பொய்யா மொழி' அன்மொழித் தொகைகள். இதற்குரிய ரல்லாதா ரில் லென் றதனாலும் பொது வேத மாத லறிக. அதற்கும் இதற்கும் பொருள் வேறா வென்றும், இதனை யோதற் கதிகாரிக

29