பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்

ளாவார் யாவரோ வென்றும் நிகழ்கின்ற ஐய மொழித்தபடி. (௨௰௩)

மாங்குடி மருதனார்.

ஓதற் கெளிதா யுணர்தற் கரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித்- தீதற்றோ
ருள்ளுதொ றுள்ளுதொ றுள்ள முருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

இ-ள். வள்ளுவர் வாய் மொழி மாண்பு - திருவள்ளுவரது வாயினின்றுந் தோன்றிய திருக்குறளினது மாட்சியைச் சொல்லின், ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி வேதப் பொருளாய் மிக விளங்கி-அது ஓதப்படுதற்கு எளிய சொற்களை யுடையதாகியும் அறியப்படுதற்கு அரிய பொருள்களை யுடையதாகியும் வேத மெனப்படுகின்ற பொருளாகியும் அவ் வேதத்தின் மிக விளங்கி, தீது அற்றோர் உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்கும் - குற்றமற்றோர்கள் நினைக்குந் தோறும் நினைக்குந் தோறும் அவர்களுடைய மனத்தைக் கரைக்கும்.

ஓதற் கெளிதா யெனவே நவின்றோர்க் கினிமை நன் மொழி புணர்த்தல்களும், உணர்தற் கரிதாகி யெனவே ஆழ முடைமையும், வேதப் பொருளா யெனவே விழுமியது பயத்தலும், பிறவுமாகிய அழகுகளின் அமைதி சொல்லப்பட்ட தாயிற்று, தீ தற்றோர் பொருளாராய்ச்சிக் கேற்ற நுண்ணறி வுடையோர். உள்ளுதொ றுள்ளுதொ றுள்ள முருக்கு மெனவே, முன் காணப்பட்டதினும் பின் காணப்படும் பொருள் சிறந்தும் விரிந்துந் தோன்றுத லுடைமை பெறப்பட்டது. இதனது அற்புதமான குண முடைமைச் சிறப்புச் சொல்லியபடி, (௨௰௪)

30