பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப் பாயிரம்.

எறிச்சலூர் மலாடனார்.

பாயிர நான்கில் லறமிருபான் பன்மூன்றே
தூய துறவறமொன் றூழாக--வாய
வறத்துப்பா னால்வகையா வாய்ந்துரைத்தார் நூலின்
றீறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து.

இ-ள். வள்ளுவனர் ஆய்ந்து நூலின் திறத்துப்பால் தேர்ந்து- திருவள்ளுவனார் அவ் வேதத்தின் கருத்துக்களை ஆராய்ந்து தம்மாலே செய்யப்பட்ட நூலினது திறத்திற்குத் தக்க நன்மை யுடைமையால் இவையே உரியவை யென்று தெரிந்து, பாயிரம் நான்கு- பாயிரம் நான் கதிகாரமும், இல்லறம் இருபான் - இல்லறவியல் இருப ததிகாரமும், துறவறம் பன் மூன்று - துறவறவியல் பதின்மூன் றதிகாரமும், ஊழ் ஒன்றாக -ஊழ் ஓ ரதிகாரமு முடையனவாக, ஆய அறத்துப்பால் நால் வகையா உரைத்தார் - இவ்வாறாய அறத்துப்பாலைப் பாயிர முதலிய நால்வகை யுடைத்தாகக் கூறினார்.

முப்பாற் பொருள்களினும் முத்திக்குக் காரணமாதற் சிறப்புடைமையின், தூய துறவற மென்றார். துப்பு - நன்மை ; அது எல்லா வருணாச்சிரமங்களுக்கும் பொதுவா யிருக்கை. அறப்பா லியலதிகாரத் தொகை சொல்லியபடி. (௨௰௫)

போக்கியார்.

அரசிய லையைந் தமைச்சிய லீரைந்
துருவல் லாணிரண்டொன் றொண்கூ --ழிருவிய
றிண்படை நட்புப் பதினேழ் குடிபதின்மூன்
றெண்பொரு ளேழா மிவை.

31