பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப் பாயிரம்.

காமத்துப் பாலின் இயல்கள் மூன்றாகப் பெயர் பெற்ற திருவள்ளுவர் நன்கு கூறினார்.

இவையே பொருளிலக்கணத்துக் கமையக் களவியல் கற்பியலென இரண்டாக்கப் பட்டன. காமத்துப் பா விய லதிகாரத் தொகை சொல்லிய படி. (௨௰௭)

காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.

ஐயாறு நூறு மதிகார மூன்றுமா
மெய்யாய வேதப் பொருள் விளங்கப்- பொய்யாது
தந்தா னுலகிற்குத் தான்வள் ளுவனாகி
யந்தா மரைமே லயன்.

இ--ள். அதிகாரம் நூறும் ஐயாறும் மூன்றுமா - அதிகாரம் நூற்று முப்பத்து மூன்றாக, மெய்யாய வேதப் பொருள் பொய்யாது விளங்க-வடமொழியி லிருந்த மெய்யாகிய வேதப் பொருள் பொய்யுறாது விளங்கும்பொருட்டு, அந் தாமரைமேல் அயன் தான் வள்ளுவனாகித் தந்தான் – அழகிய தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் நான்முகக் கடவுள் தான் திருவள்ளுவனாகி உலகத்தார்க்குத் தமிழிற் செய்து தந்தான்.

உலகு இங்கே மக்களை உணர்த்தி நின்றது. மெய்யாய வேதப் பொருள் பொய்யாது விளங்க வெனவே, இதற்குமுன் மெய்யாய பொருள் பொய்யாய் மறைந்தும், பொய்யாய பொருள் மெய்யாய் விளங்கியும் கிடந்தமை சொல்லப்பட்ட தாயிற்று. அதிகாரத் தொகையோடு நூற் பொருளியல்பு சொல்லிய படி. (௨௰௮)

மதுரைத் தமிழ் நாயகனார்.

எல்லாப் பொருளு மிதன்பா லுளவிதன்பா

லில்லாத வெப்பொருளு மில்லையாற் - சொல்லாற்

33