பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்


பரந்தபா வாலென் பயன்வள் ளுவனார்
சுரந்தபா வையத் துணை.

இ-ள். எல்லாப் பொருளும் இதன்பால் உள- பலவகை நூல்களாலுஞ் சொல்லப்பட்ட எல்லாப் பொருளும் இந் நூலகத்து அடங்கி யிருக்கின்றன; இதன்பால் இல்லாத எப் பொருளும் இல்லை - இதனிடத்து இல்லாத யாதொரு பொருளும் எந் நூலகத்தும் இல்லை; சொல்லாற் பரந்த பாவால் பயன் என் - ஆதலால், சொல்லளவினாலே விரிந்த நூல்களாற் பயன் யாது? வள்ளுவனார் சுரந்த பா வையத் துணை- திருவள்ளுவராலே தரப்பட்ட இந் நூ லொன்றே மண்ணுலகத் தாருக்குத் துணையாத லமையும்,

எல்லாப் பொருள்களு மாவன, முதல் வழி சார்பென மூ வகைப்பட்ட அற நூல் பொரு ணூல் இன்ப நூல் வீட்டு நூல் என்ப வற்றிற் செம் பொருள் ஆக்கப் பொருள் குறிப்புப் பொரு ளென இம் மூவகையாற் கொள்ளக் கிடந்த காட்சிப் பொருள்களும் கருத்துப் பொருள்களு மாம். 'தொழிலும் பண்பும் ஒரோ வழிப் பொரு ளெனற்கு ஏற் புடைமையின், அவையும் இவற்றுள் அடங்கு மா றறிக. பின்னும் அதனை வலி யுறுத்தற்கு இதன்பா லில்லாத வெப் பொருளுமில்லை யென்றார். சொல்லாற் பரந்த வெனவே, அவை பொருளாற் பரப்பின்மை பெறப்பட்டது. பரத்தல் பதி னாயிரம் நூறாயிர முதலிய கிரந்த அளவையால் விரிதல், சொல்லாற் பரந்த நூல்களை ஆய்வோர் மலை யகழ்ந்து எலி பிடித்தல் போல மிக வருந்திச் சிறு பயன் கொள்ளுதலால், என் பய னென்றார். 'ஆல்' அசை, 'பா, 'வையம்' ஆகுபெயர்கள். சின்னாட் பல் பிணிச் சிற் றறிவுடையோர்க்கு விதி விலக்குக்கள் முற்றும் உள்ளங்கை நெல்லிக் கனி போலக் கண்டு தெளியுமாறு உணர்த்தித் தடுமாற்றந் தீர்த்தலின். வையத் துணை யென்றார். முற்றொருங் குணர விழைவார்க்கு இஃது இன்றியமையாச் சிறப்பிற் றென்றபடி, (௨௰௯)

34