பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

சமர்ப்பணம்
{நேரிசை யாசிரியப்பா}

உலக மனைத்து நலனுறப் புரக்கும்
சச்சிதா நந்த மெய்ப்பொரு ளருளால்,
வேண்டிய வெலாந்தரும் பாண்டிய நாட்டில்
தேட்ட நிறைந்த ஒட்டப் பிடாரம்
என்னும் பெயர்கொள் தென்னள கைநகர்ச்
சிதம்பரக் கவிஞன் சீரார் பேரன்
உலகநா தன்மகன் சிதம்பரம் எனும்யான்
திருவள் ளுவரின் திருக்குறட் கியற்றிய
உரையினை நற்பவ வருடந் தையிரு
பத்தா றிற்சமர்ப் பித்தனன் பண்புடன்;
நூற்றுக் குடியென சாற்றும் பெயரினை
மருவி நிற்குந் திருமந் திரநாகரில்
சீருஞ் சிறப்புஞ் செல்வமிட் டாக்களும்
பொன்மனை மாளிகை நன்மனை மக்களும்
பெற்றறம் புரிந்து கற்றுநன் னூல்கள்
சிறந்து விளங்குஞ் சிலுக்கம் பட்டி
அ.செ.சு. கந்த சுவாமி ரெட்டியார்
அ.செ.சு. முத்தைய ரெட்டியார் என்னும்
மாண்பா ரிரண்டு வள்ளல் களுக்கே;
அவர்கள் முருகன் அருளாற் றமது
மக்கட்கெலாநன் மணங்கள் செய்வித்துப்
பேரர் பேத்திகள் சீருறப் பெற்றிவண்
இன்பந் துய்த்தற மியற்றி
நீள்புகழ் பெருக்கி நீடு வாழ்ந்திடவே.